சென்னை வரும் வெளியூர் பேருந்துகள் தாம்பரம் வழியாக செல்ல அனுமதி: போக்குவரத்துத்துறை


சென்னை வரும் வெளியூர் பேருந்துகள் தாம்பரம் வழியாக செல்ல அனுமதி: போக்குவரத்துத்துறை
x
தினத்தந்தி 17 Feb 2023 4:09 AM GMT (Updated: 17 Feb 2023 4:34 AM GMT)

வெளியூரில் இருந்து சென்னை வரும் அரசு பேருந்துகள் பகலில் இனி தாம்பரம் வழியாக செல்லலாம் என போக்குவரத்துத்துறை உத்தரவிட்டுள்ளது. .

சென்னை,

சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு வரும் வெளியூரை சேர்ந்த பேருந்துகள், அலுவலக நேரங்களில் நகரத்திற்குள் வரும்போது போக்குவரத்து இடையூறு ஏற்படக்கூடிய காரணத்தினால், மாற்றுவழியாக பெருங்களத்தூர்- மதுரவாயல் பைபாஸ் வழியாக கோயம்பேடு வந்து சேருகிறது.

இந்த நிலையில், அரசு போக்குவரத்து கழகமானது பிற மாநிலங்களில் இருந்து கோயம்பேடு வரும் அரசு பேருந்துகள் தாம்பரம் வழியாக செல்லலாம் என்ற உத்தரவினை பிறப்பித்து உள்ளது.

இதன் காரணமாக பகல் நேரங்களில் வெளியூரிலிருந்து வரும் பேருந்துகள் தாம்பரம் வழியாக செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக சென்னை மாநகர பகுதிக்கு வரும் மக்களுக்கு இது மிகுந்த வரவேற்பாக அமையும் என்று பார்க்கப்படுகிறது.

சென்னைக்கு மாலை 5 மணிக்கு மேல் வரும் பேருந்துகள் மதுரவாயல் சுங்கச்சாவடி வழியாக கோயம்பேடு செல்ல உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்படி பகலில் பெருங்களத்தூர் வரும் அரசு பேருந்துகள் தாம்பரம், குரோம்பேட்டை, வடபழனி ஆகிய வழித்தடத்தில் வருகை தந்து கோயம்பேடு செல்லும்.


Next Story