யூடியூபர் கார்த்தி கோபிநாத்திற்கு எதிரான வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை - சென்னை ஐகோர்ட்டு உத்தரவு


யூடியூபர் கார்த்தி கோபிநாத்திற்கு எதிரான வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை - சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
x

யூடியூபர் கார்த்தி கோபிநாத்திற்கு எதிரான வழக்கு விசாரணைக்கு சென்னை ஐகோர்ட்டு இடைக்காலத் தடை விதித்துள்ளது.

சென்னை,

பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூரில் உள்ள மதுரகாளியம்மன் கோயில் திருப்பணி எனக்கூறி பொதுமக்களிடம் பெரும் தொகையை நன்கொடையாக வசூலித்து மோசடி செய்துள்ளதாக ஆவடியைச் சேர்ந்த யூடியூபரான கார்த்திக் கோபிநாத்தை போலீஸார் கைது செய்தனர். இந்த வழக்கில் அவருக்கு பூந்தமல்லி நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.

இந்நிலையில் அவரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி போலீஸார் தரப்பிலும், தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி கார்த்திக் கோபிநாத் தரப்பிலும் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில் இந்த வழக்கு சென்னை ஐகோர்ட்டு நீதிபதி சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது கார்த்திக் கோபிநாத்தின் தனிப்பட்ட கணக்கு விவரங்கள் வங்கியிடம் கேட்கப்பட்டுள்ளதாகவும், அது இன்னும் வழங்கப்படவில்லை என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து போதுமான அவகாசம் அளித்தும் காவல்துறை உரிய ஆதாரங்களை தாக்கல் செய்யவில்லை என கூறி கார்த்தி கோபிநாத்திற்கு எதிரான வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்து நீதிபதி உத்தரவிட்டார். மேலும் வழக்கு விசாரணயை ஜூலை 7ம் தேதிக்கு ஒத்திவத்து உத்தரவிட்டார்.


Next Story