சர்வதேச தடகள போட்டி: கோவை மாணவி பதக்கம் வென்று சாதனை...!


சர்வதேச தடகள போட்டி: கோவை மாணவி பதக்கம் வென்று சாதனை...!
x
தினத்தந்தி 23 May 2022 7:21 PM IST (Updated: 23 May 2022 9:21 PM IST)
t-max-icont-min-icon

பிரான்சில் நடைபெற்ற சர்வதேச தடகள போட்டியில் கோவை மாணவி பதக்கம் வென்று சாதனை படைத்து உள்ளார்.

கோயம்புத்தூர்


சர்வதேச அளவில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கான தடகள போட்டி பிரான்சு நாட்டில் நடைபெற்றது. இதில் இந்தியா உள்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் பங்கேற்றவர்களுக்கு ஓட்டப்பந்தயம், குண்டு எறிதல், மும்முறை தாண்டுதல், நீளம் தாண்டுதல், ஈட்டி எறிதல் என பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் கோவையை சேர்ந்த தனியார் பள்ளி பிளஸ்-2 மாணவி திவ்யாஸ்ரீ மும்முறை தாண்டும் போட்டியில் பங்கேற்று 12.22 மீட்டர் தூரம் தாண்டி வெள்ளி பதக்கம் வென்று சாதனை படைத்தார்.

சாதனை படைத்த மாணவியை பயிற்சியாளர் நந்தகுமார், ராஜேஷ் கண்ணன் மற்றும் கோவை தடகள சங்க நிர்வாகிகள், சக மாணவிகள் பாராட்டினர்.

1 More update

Next Story