சர்வதேச கல்வி கருத்தரங்கு
திசையன்விளை மனோ கல்லூரியில் சர்வதேச கல்வி கருத்தரங்கு நடந்தது.
திருநெல்வேலி
இட்டமொழி:
திசையன்விளை மனோ கல்லூரியில் ஆங்கிலத்துறையின் சார்பில் சர்வதேச கல்வி கருத்தரங்கு நடைபெற்றது. துறை தலைவர் கே.தமிழ்ச்செல்வி வரவேற்றார். கல்லூரி முதல்வர் சி.சுந்தரவடிவேல் தலைமை தாங்கினார். இதில் தி.மு.க. இளைஞரணி நிர்வாகி விஜயாபதி ஏ.ஆர்.ரஹ்மான், தொழிலதிபர் நவ்வலடி ஜெயபால் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.
கோவிந்தபேரி கல்லூரி முதல்வர் (பொறுப்பு) என்.பூவலிங்கம், பேராசிரியர்கள் டி.கெத்சி ஜாய், சி.பட்டு சூர்யா, வர்கீஸ் ரிஜூ ஜோஸ்வா, சுபாஷ் கருத்துடையான், சாந்தினி சாரா தேவசகாயம் ஆகியோர் பேசினார்கள். முடிவில் உதவி பேராசிரியர் ஒய்.பெனட் நன்றி கூறினார். பின்னர் கருத்தரங்கில் கலந்து கொண்ட மாணவ-மாணவிகள் உள்பட அனைவருக்கும் விஜயாபதி ஏ.ஆர்.ரஹ்மான் உணவு வழங்கினார்.
Related Tags :
Next Story