சர்வதேச யோகா தின விழா


சர்வதேச யோகா தின விழா
x

சர்வதேச யோகா தின விழா நடந்தது.

அரியலூர்

யோகா பயிற்சி

சர்வதேச யோகா தின விழாவையொட்டி அரியலூரில் ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் அரியலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மூலம் யோகா பயிற்சி, மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதியும், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுத் தலைவருமான மகாலெட்சுமி தலைமையில் நடைபெற்றது. இதில் நீதிபதிகள், வக்கீல்கள், நீதிமன்ற ஊழியர்கள், வழக்காடிகள், மாணவர்கள் ஆகியோருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிபதி கர்ணன், குடும்ப நல நீதிபதி செல்வம், மாவட்ட தலைமை குற்றவியல் நடுவர் சரவணன், சார்பு நீதிபதி ஜெயசூரியா, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் அழகேசன் மற்றும் நீதிபதிகள், வழக்கறிஞர்கள் சங்கத்தினர், மாவட்ட நீதிமன்ற முதன்மை நிர்வாக அலுவலர் சவுந்தர்ராஜன், சட்ட தன்னார்வலர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இயற்கை மருத்துவர் முத்துக்குமார் யோகா பயிற்சி அளித்தார்.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே சின்னவளையம் அரசு உயர்நிலைப்பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியர் கொளஞ்சியப்பா தலைமை தாங்கினார். அரியலூர் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக அரியலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமன் கலந்து கொண்டு சிறப்பாக யோகா செய்த மாணவ-மாணவிகளை பாராட்டினார். அவர் பேசுகையில், மாணவர்கள் தினமும் அதிகாலை எழுந்து 30 நிமிடம் யோகா பயிற்சி மேற்கொண்டால் உடல் ஆரோக்கியமாவதோடு, உள்ளமும் மேன்மையடையும் என்றார். உடற்கல்வி ஆசிரியர் பாண்டியன் மற்றும் துரைமுருகன் ஆகியோர் யோகா பயிற்சி அளித்தனர்.

கல்லூரியில்...

தா.பழூர் அருகே உள்ள சிலால் அரசு உயர்நிலைப்பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு யோகாசனம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியர் கோபிநாத் தலைமை தாங்கினார். மனவளக்கலை மன்ற பொறுப்பாளர் கவுசல்யா விழிப்புணர்வு பிரசாரம் செய்து, யோகா பயிற்சி அளித்தார். யோகா குறித்து ராஜா விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இதில் உடற்கல்வி ஆசிரியை பிரபாவதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

வி.கைகாட்டியை அடுத்த விளாங்குடி அருகே காத்தான்குடிகாடு கிராமத்தில் உள்ள அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில் மாவட்ட அரசு மருத்துவ கல்லூரி யோகா மற்றும் இயற்கை மருத்துவ வாழ்வியல் மைய மருத்துவர் முத்துகுமார் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு யோகாசனங்களை செய்துகாட்டி, விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இதில் முதலாம் ஆண்டு மாணவர்கள் யோகா விளக்க பயிற்சிகளை செய்தனர். நிகழ்ச்சிக்கு கல்லூரி புல முதல்வர் செந்தமிழ்செல்வன் தலைமை தாங்கினார். மாணவ, மாணவிகள், பேராசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் பங்கேற்றனர். இதற்கான ஏற்பாடுகளை இளைஞர் செஞ்சிலுவை சங்க ஒருங்கிணைப்பாளர் ஆதிலட்சுமி செய்திருந்தார். சிறுவலூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவர்கள் பல்வேறு வகையான யோக பயிற்சிகளை செய்தனர். இடையத்தான்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியிலும், பள்ள கிருஷ்ணாபுரம் ஊராட்சி ஒன்றிய நிலைபள்ளி உள்ளிட்ட பல்வேறு பள்ளிகளில் மாணவர்கள், ஆசிரியர்கள் யோகாசனம் செய்தனர்.


Next Story