116 ரேஷன் கடை விற்பனையாளர் பணியிடங்களுக்கான நேர்முக தேர்வு


116 ரேஷன் கடை விற்பனையாளர் பணியிடங்களுக்கான நேர்முக தேர்வு
x
தினத்தந்தி 30 Nov 2022 6:30 PM GMT (Updated: 30 Nov 2022 6:30 PM GMT)

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ரேஷன் கடைகளில் காலியாக உள்ள 116 விற்பனையாளர் பணியிடங்களுக்கான நேர்முகத்தேர்வு வருகிற 12-ந் தேதி முதல் 23-ந் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான அனுமதி சீட்டை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி

இதுகுறித்து மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் மீனா அருள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

நேர்முகத்தேர்வு

கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் பல்வேறு வகையான கூட்டுறவு சங்கங்களில் காலியாக உள்ள 116 ரேஷன்கடை விற்பனையாளர்கள் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கு தகுதி பெற்ற விண்ணப்பதாரர்களிடமிருந்து இணையவழி விண்ணப்பங்கள் பெறப்பட்டது.

பின்னர் இந்த விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு நேர்முக தேர்வு கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரி அருகில் உள்ள டேனிஷ் மிஷின் நகர தொடக்கப்பள்ளியில் வருகிற 12-ந் தேதி முதல் 23-ந் தேதி வரை நடைபெறுகிறது.

அனுமதி சீ்ட்டு

இதற்கான அனுமதி சீட்டு கடந்த 29-ந் தேதி முதல் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்தின் www.drbkak.in/hallticket.php என்ற இணைய தளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அனுமதி சீட்டு பதிவிறக்கம் செய்ய இயலாதவர்கள் உரிய சான்றோப்பமிட்ட ஆவணங்களுடன் வருகிற 23-ந் தேதி சான்றிதழ் சரிபார்ப்புக்கு பின்னர் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ளலாம்.

மேலும் இதுபற்றிய கூடுதல் விபரங்களுக்கு மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்தை 7338749728 என்ற செல்போன் எண்ணிலோ அல்லது jrkallai.rcs@gmail.com என்ற இ-மெயிலிலோ தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


Next Story