கேந்திரிய வித்யாலயா பள்ளியில் ஆசிரியர் பணிகளுக்கான நேர்முக தேர்வு; நாளை முதல் நடக்கிறது


கேந்திரிய வித்யாலயா பள்ளியில் ஆசிரியர் பணிகளுக்கான நேர்முக தேர்வு; நாளை முதல் நடக்கிறது
x

கேந்திரிய வித்யாலயா பள்ளியில் ஆசிரியர் பணிகளுக்கான நேர்முக தேர்வு நாளை முதல் நடக்கிறது.

பெரம்பலூர்

பெரம்பலூரில் மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் பகுதி நேர, தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கான நேர்முக தேர்வு நாளை (திங்கட்கிழமை), நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை), 29, 30-ந்தேதிகளில் நடைபெறுகிறது. இந்தி, வேதியியல், கணிதம், உயிரியல் பாடங்களில் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கும், சமூகஅறிவியல், வரலாறு, புவியியல், உயிரியல், ஆங்கிலம், இந்தி, சமஸ்கிருதம், கணிதம் பாடங்களில் இளங்கலை ஆசிரியர் பணிக்கும் நாளை நேர்முகத்தேர்வு நடைபெறுகிறது. நாளை மறுநாள் ஆங்கிலம், கணிதம், சமூக அறிவியல், இந்தி ஆகிய பாடங்களில் தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் பணிக்கு நேர்முகத் தேர்வு நடைபெறுகிறது. 29-ந்தேதி உடற்கல்வி, யோகா பயிற்சியாளர், டாக்டர், செவிலியர், மனநல ஆலோசகர், இசை, நடனம், ஓவியம் மற்றும் கைவினை பயிற்சியாளர்கள், தமிழ் ஆசிரியர் ஆகிய பணிகளுக்கும், 30-ந்தேதி முதுகலை கணினி ஆசிரியர், கணினி பயிற்றுனர், அலுவலக பணிகளை மேற்கொள்வதற்கான டேட்டா என்ட்ரி ஆபரேட்டர், ஆண், பெண் உதவியாளர்கள் ஆகிய அனைத்து பணிகளுக்கும் தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய தகுதியானவர்களுக்கு நேர்முகத் தேர்வு நடைபெறுகிறது.

இதில் எழுத்து தேர்வு, நேர்காணல் மற்றும் செயல் முறை தேர்வு வாயிலாக தேர்ந்தெடுக்கப்பட்டு ஒரு ஆண்டு வரை பட்டியலில் வைக்கப்படுவார்கள். காலி பணியிடத்திற்கான வாய்ப்பு ஏற்படும்போது, தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு பணி வாய்ப்பு தற்காலிகமாக வழங்கப்படும். இத்தகைய தற்காலிக வேலை வாய்ப்பு குறித்த அனைத்து விவரங்களையும் பெரம்பலூர் கேந்திரிய வித்யாலயா பள்ளியின் www.perambalur.kvs.ac.in என்ற இணையதளத்தின் வாயிலாக அறிந்து கொள்ளலாம். ஆங்கிலத்தில் சரளமாக பேசும் திறன், புதிய கல்வி கொள்கை குறித்த அடிப்படை அறிவு, கம்ப்யூட்டர் சார்ந்த பயிற்றும் திறன், தட்டச்சு போன்ற திறமை உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும், என்று கலெக்டர் கற்பகம் தெரிவித்துள்ளார்.


Next Story