பயனாளிகளை தேர்வு செய்ய நேர்காணல்


பயனாளிகளை தேர்வு செய்ய நேர்காணல்
x
தினத்தந்தி 17 Dec 2022 12:15 AM IST (Updated: 17 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

வடசித்தூர் சமத்துவபுரத்தில் காலியான 2 வீடுகளுக்கு பயனாளிகளை தேர்வு செய்ய நேர்காணல் நடத்தப்பட்டது.

கோயம்புத்தூர்

கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றியம் வடசித்தூர் ஊராட்சியில் கொண்டம்பட்டி வடசித்தூர் செல்லும் ரோட்டில் சமத்துவபுரம் உள்ளது. இங்குள்ள 2 வீடுகள் பயனாளிகள் இன்றி பூட்டிக் கிடந்தது.

அந்த வீடுகளை கேட்டு கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மொத்தம் 32 பேர் விண்ணப்பம் கொடுத்தனர்.

இந்த நிலையில் பயனாளிகளை தேர்வு செய்வதற்காக நேற்று கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நேர்காணல் நடைபெற்றது. பயனாளிகளிடம் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) அலர்மேலு மங்கை நேர்காணல் நடத்தினார்.

அப்போது கிணத் துக்கடவு தாசில்தார் மல்லிகா, ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் ராதாகிருஷ்ணன், வட்டார வளர்ச்சி அலுவலர் சிக்கந்தர் பாஷா உள்பட பலர் கலந்து கொண்டனர்

இது குறித்து ஒன்றிய அதிகாரிகள் கூறுகையில், வடசித்தூர் சமத்துவபுரத்தில் காலியான 2 வீடுகளுக்கு பயனாளிகளை தேர்வு செய்ய நேர்காணல் நடத்தப்பட்டது. அந்த அறிக்கை கலெக்ட ருக்கு அனுப்பி வைக்கப்படும். அவர், தகுதியான பயனாளிகளை அறிவிப்பார் என்றனர்.


Next Story