பாப்பாரப்பட்டி, அரூரில் இந்திரா காந்தி பிறந்தநாள் விழா
பாப்பாரப்பட்டி, அரூரில் காங்கிரஸ் கட்சி சார்பில் இந்திரா காந்தி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
காங்கிரஸ் கட்சி
பாப்பாரப்பட்டியில் நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் இந்திரா காந்தி பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. நகர தலைவர் தங்கராஜ் தலைமை தாங்கினார். மாநில பொதுக்குழு உறுப்பினர் கிருஷ்ணன், மாவட்ட செயலாளர் இளங்கோ, வட்டார பொதுச்செயலாளர் சண்முகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் கட்சி நிர்வாகிகள் இந்திரா காந்தியின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.
இதில் முன்னாள் வட்டார தலைவர் சண்முகம், வட்டார துணை தலைவர்கள் நாகராஜ், மணி, மாவட்ட செயலாளர் வக்கீல் வேலு, வட்டார செயலாளர்கள் வேடியப்பன், சுந்தரம், நகர துணைத்தலைவர் குமரேசன், நிர்வாகிகள் மணி, ராமு, பூபால், மாணிக்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் வட்டார செயலாளர் ரத்தினம் நன்றி கூறினார்.
அரூர், பாப்பிரெட்டிப்பட்டி
இதேபோல் அரூர் காங்கிரஸ் கமிட்டி சார்பில் இந்திரா காந்தி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. வட்டார தலைவர் வஜ்ஜிரம் தலைமை தாங்கினார். விழாவில் அரசு ஆண்கள் பள்ளியில் உள்ள இந்திரா காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் நகர தலைவர் கணேசன், மாவட்ட வர்த்தக பிரிவு தலைவர் மோகன், சுந்தரம், அப்பாவு, சிவலிங்கம், ஜெயராஜ், மணி, சேட்டு, செல்வம், முருகேசன், பழனி, அன்வர்பாய், உமையன், கேசர், நாராயனன் மற்றும் மாவட்ட, நகர, வட்டார, மகளிர் காங்கிரஸ், இளைஞர் காங்கிரஸ் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள பைநத்தம் கிராமத்தில் இந்திரா காந்தி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. பாப்பிரெட்டிப்பட்டி வட்டார காங்கிரஸ் தலைவர் வேலன் தலைமை தாங்கினார். எஸ்.சி. பிரிவு மாநில பொது செயலாளர் ராமசுந்தரம் முன்னிலை வகித்தார். மாவட்ட துணைத்தலைவர் ஜெயபிரகாஷ், பூதநத்தம் ஊராட்சி மன்ற தலைவர் அருணாசலம், மாநில செயற்குழு உறுப்பினர் மோகன் குமார் ஆகியோர் கட்சி கொடியேற்றதுடன், இந்திரா காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் ஆசிரியர் சிவன், நிர்வாகிகள் ரவி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.