கடன் செயலி மூலம் பணம் வாங்கிய பெண்ணிற்கு மிரட்டல்


கடன் செயலி மூலம் பணம் வாங்கிய பெண்ணிற்கு மிரட்டல்
x
தினத்தந்தி 23 July 2023 12:15 AM IST (Updated: 23 July 2023 4:18 PM IST)
t-max-icont-min-icon

கடன் செயலி மூலம் பணம் வாங்கிய சிவகங்கை வடக்கு ராஜவீதியை சேர்ந்த 49 வயது பெண்ணிற்கு மிரட்டல் விடுக்கப்பட்டது.

சிவகங்கை

சிவகங்கை வடக்கு ராஜவீதியை சேர்ந்த 49 வயது பெண் ஒருவர் இணையதளத்தில் கடன் வழங்கும் செயலி ஒன்றை பயன்படுத்தி ஜூன் மாதம் இரண்டு தவணையாக ரூ.4 ஆயிரத்து 556-ஐ வாங்கியுள்ளார். அந்த பணத்தை ஜூலை மாதம் இரண்டு நபர்களுக்கு ரூ.7 ஆயிரத்து 217-ஆக செலுத்தியுள்ளார். பணத்தை பெற்று கொண்ட நபர்கள் மேலும் கூடுதலாக பணம் செலுத்த வேண்டும் என்று கூறியுள்ளனர்.

இல்லையென்றால் அந்த பெண்ணின் உறவினர் மற்றும் நண்பர்களுக்கு மார்பிங் செய்யப்பட்ட அவரது ஆபாச படத்தை அனுப்புவதாக கூறி மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜிடம் புகார் செய்தார். அவரது உத்தரவின் பேரில் சைபர் கிரைம் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு நமச்சிவாயம், இன்ஸ்பெக்டர் தேவி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story