சிறுமியின் கருமுட்டை விற்பனை விவகாரம்: ஓசூர் தனியார் மருத்துவமனையில் மருத்துவக்குழுவினர் விசாரணை
சிறுமியின் கருமுட்டை விற்பனை விவகாரம்: ஓசூர் தனியார் மருத்துவமனையில் மருத்துவக்குழுவினர் விசாரணை
கிருஷ்ணகிரி
ஓசூர்:
ஈரோடு பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கு, 16 வயதில் ஒரு மகள் உள்ளார். சிறுமியின் கருமுட்டையை தாய் உள்பட 3 பேர் சேர்ந்து தனியார் ஆஸ்பத்திரிகளில் விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. சேலம், ஈரோடு, பெருந்துறை, மற்றும் ஓசூர் ஆகிய இடங்களில் உள்ள தனியார் மருத்துவமனைகளுக்கு அழைத்து சென்று 8 முறை கருமுட்டைகளை விற்பனை செய்ததும் தெரியவந்தது.
இந்த விவகாரத்தில் விசாரணை நடத்துவதற்காக கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் பழைய பெங்களூரு சாலையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு சென்னை சுகாதாரத்துறை இணை இயக்குனர் விசுவநாத் தலைமையில் அவர் உள்பட 4 பேர் கொண்ட மருத்துவக்குழுவினர் நேற்று இரவு 8.30 மணியளவில் வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story