சேலம் அரசு ஆஸ்பத்திரி நர்சுகளிடம் விசாரணை


சேலம் அரசு ஆஸ்பத்திரி நர்சுகளிடம் விசாரணை
x
தினத்தந்தி 9 Dec 2022 7:30 PM GMT (Updated: 9 Dec 2022 7:30 PM GMT)

மாஜிஸ்திரேட்டை கேலி செய்த விவகாரம் தொடர்பாக சேலம் அரசு ஆஸ்பத்திரி நர்சுகளிடம் விசாரணை நடத்தப்பட்டது.

சேலம்

மேட்டூர் பகுதியை சேர்ந்த 17 வயது பள்ளி மாணவி கடந்த சில நாட்களுக்கு முன்பு விஷம் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். அந்த மாணவி சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். மாணவியிடம் வாக்குமூலம் பெற சேலம் முதலாவது ஜூடிசியல் பெண் மாஜிஸ்திேரட்டு ஆஸ்பத்திரிக்கு வந்துள்ளார். அப்போது அங்கிருந்த 2 நர்சுகள், மாஜிஸ்திரேட்டை கேலி செய்ததாக தெரிகிறது. நடந்த சம்பவம் குறித்து மாஜிஸ்திரேட்டு ஆஸ்பத்திரி போலீஸ் நிலையத்தில் தகவல் தெரிவித்து விட்டு சென்றார்.

இதற்கிடையே நேற்று மாலை ஆஸ்பத்திரி டீன் மணி, கண்காணிப்பாளர் தனபால், உறைவிட மருத்துவ அதிகாரி (பொறுப்பு) வினோத்குமார் ஆகியோர் சேலம் முதலாவது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டை நேரில் சந்தித்து கேலி செய்த நர்சுகள், டாக்டர் ஆகியோர் மீது நாங்கள் துறை ரீதியான நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதைதொடர்ந்து அவர்களிடம் ஆஸ்பத்திரி டீன் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் விளக்கம் கேட்டு விசாரணை நடத்தினர்.


Next Story