உலகத்தமிழ் மாநாட்டில் பங்கேற்க அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு அழைப்பு


உலகத்தமிழ் மாநாட்டில் பங்கேற்க அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு அழைப்பு
x

மலேசியாவில் நடைபெறும் உலகத்தமிழ் மாநாட்டில் பங்கேற்க அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

சென்னை,

11-வது உலகத்தமிழ் மாநாடு மலேசியாவில் நடக்க உள்ளது. ஜூலை 21-ந் தேதி முதல் 23-ந் தேதி வரை அங்குள்ள பல்கலைக் கழக வளாகத்தில் இந்த மாநாடு நடைபெறுகிறது. 3 நாட்கள் நடைபெற உள்ள இந்த மாநாட்டில் 100 நாடுகளை சேர்ந்த 2500 தமிழறிஞர்கள் பங்கேற்கிறார்கள். இணைய காலகட்டத்தில் தமிழ் மொழி எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து இம்மாநாட்டில் ஆலோசனை நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் மலேசியாவில் நடைபெற உள்ள உலகத்தமிழ் மாநாட்டில் பங்கேற்க அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அந்த அழைப்பை ஏற்று உலகத்தமிழ் மாநாட்டில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொள்ள வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதைபோல தமிழ்நாட்டைச் சேர்ந்த அமைச்சர்கள், பல்வேறு கட்சிகளின் தலைவர்கள், மத்திய அமைச்சர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

1 More update

Next Story