அர்ச்சகர் நியமனம் தொடர்பாக ஐகோர்ட்டு தீர்ப்பு வரவேற்கத்தக்கது


அர்ச்சகர் நியமனம் தொடர்பாக ஐகோர்ட்டு தீர்ப்பு வரவேற்கத்தக்கது
x

தமிழக கோவில்களில் அர்ச்சகர் நியமனம் தொடர்பாக ஐகோர்ட்டு தீர்ப்பு வரவேற்கத்தக்கது என திருவாரூரில், தி.க. தலைவர் கி.வீரமணி கூறினார்.

திருவாரூர்

திருவாரூர்;

தமிழக கோவில்களில் அர்ச்சகர் நியமனம் தொடர்பாக ஐகோர்ட்டு தீர்ப்பு வரவேற்கத்தக்கது என திருவாரூரில், தி.க. தலைவர் கி.வீரமணி கூறினார்.

மாநாடு ஒத்திவைப்பு

திராவிட கழகம் சார்பில் நேற்று திருவாரூரில் சனாதன எதிர்ப்பு திராவிட மாடல் விளக்க திறந்தவெளி மாநாடு நடைபெறுவதாக இருந்தது. இந்த மாநாட்டில் தி.க.தலைவர் கி. வீரமணி, தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர். எஸ். பாரதி, காங்கிரஸ் கட்சி தலைவர் கே. எஸ் அழகிரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன் உள்பட தி.மு.க. கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டு பேசுவதாக இருந்தது. இந்தநிலையில் கடும் மழை காரணமாக இந்த மாநாடு ஒத்தி வைக்கப்பட்டது.

வரவேற்கத்தக்கது

இது குறித்து தி.க. தலைவர் வீரமணி நிருபர்களிடம் கூறியதாவது:-தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ள திறந்தவெளி மாநாடு அடுத்த மாதம் (செப்டம்பர்) 4-ந்தேதி திருவாரூரில் நடைபெறுகிறது. அந்த மாநாட்டில் இன்றைய (நேற்று) கூட்டத்தில் கலந்து கொள்ள இருந்த அனைத்து தலைவர்களும் கலந்து கொண்டு பேச உள்ளனர். மேலும் தமிழக கோவில்களில் அர்ச்சகர் நியமனம் தொடர்பாக அரசின் உத்தரவு செல்லும் என சென்னை ஐகோர்ட்டு அளித்துள்ள தீர்ப்பு வரவேற்கத்தக்கது.இவ்வாறு அவர் கூறினார்.பேட்டியின் போது பூண்டி கே. கலைவாணன் எம்.எல்.ஏ. உள்பட பலர் இருந்தனர்.


Next Story