கோவில் நிதியில் முறைகேடா? -விசாரிக்க நீதிபதி உத்தரவு
கோவில் நிதியில் முறைகேடு குறித்து விசாரிக்க நீதிபதி உத்தரவிட்டார்
மதுரை
மதுரையைச்சேர்ந்த முத்து சோமசுந்தரம், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-திருப்புவனத்தில் உள்ளபழமையான ஆதிகோரக்கநாதர் சுவாமி கோவிலை நிர்வகிப்பதில் இரு பிரிவினருக்கு இடையே பிரச்சினை ஏற்பட்டது. ஏற்கனவே கோவில் நிர்வாக பொறுப்பில் இருந்தவர்கள், வங்கிக்கணக்கில் இருந்து ரூ.10 லட்சத்தை சட்ட விரோதமாக எடுத்துள்ளனர். இதுசம்பந்தமாக அறநிலையத்துறை அதிகாரிகளிடம் புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார். இந்த மனு நீதிபதி ஆஷா முன்பு விசாரணைக்கு வந்தது. முடிவில், மனுதாரர்கள் புகார் குறித்து அறநிலையத்துறை அதிகாரிகள், இருதரப்பினரையும் தனித்தனியே அழைத்து விசாரணை நடத்த வேண்டும். இந்த விசாரணையை 8 வாரத்தில் முடிக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.
Related Tags :
Next Story