நீர்பாசன மேலாண்மை சட்ட பயிற்சி முகாம்:வேளாண் உற்பத்தியை அதிகரிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை-பொதுப்பணித்துறை அதிகாரிகள் தகவல்


நீர்பாசன மேலாண்மை சட்ட பயிற்சி முகாம்:வேளாண் உற்பத்தியை அதிகரிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை-பொதுப்பணித்துறை அதிகாரிகள் தகவல்
x
தினத்தந்தி 26 Dec 2022 12:15 AM IST (Updated: 26 Dec 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

நீர்பாசன அமைப்பு மேலாண்மை சட்டம் குறித்து நடந்த பயிற்சி முகாமில் வேளாண் உற்பத்தியை அதிகரிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருவதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி

நீர்பாசன அமைப்பு மேலாண்மை சட்டம் குறித்து நடந்த பயிற்சி முகாமில் வேளாண் உற்பத்தியை அதிகரிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருவதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

திறன் ஆக்கப்பயிற்சி

பரம்பிக்குளம்-ஆழியாறு பாசன திட்டம் பாலாறு படுகை நீரினை பயன்படுத்துவோர் சங்கங்களுக்கு திறன் ஆக்கப்பயிற்சி பி.ஏ.பி. திட்ட அலுவலகத்தில் நடைபெற்றது. இதற்கு பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ரவி முன்னிலை வகித்தார். கண்காணிப்பு பொறியாளர் தேவராஜன் தலைமை தாங்கி பேசினார். முன்னதாக உதவி செயற்பொறியாளர் சக்திகுமார் வரவேற்று பேசினார். பயிற்சியில் விவசாயிகள் நீர்பாசன அமைப்பு முறை மேலாண்மை சட்டம் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் முன்னாள் திருமூர்த்தி நீர்தேக்க திட்டக்குழு தலைவர் மெடிக்கல் பரமசிவம், பகிர்மான குழு தலைவர்கள், பாசன சபை தலைவர்கள், ஆட்சிமன்ற குழு உறுப்பினர்கள், பொதுப்பணித்துறை அதிகாரிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் உதவி பொறியாளர் ராஜன் நன்றி கூறினார். இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

தற்போதைய பாசன அமைப்பு முறைகளின் மூலம் கிடைக்க பெறும் தண்ணீர் உரிய நேரத்தில் தேவையான அளவில் கிடைப்பதில் பல சிரமங்கள் உள்ளன. முக்கியமாக கடைமடை விவசாயிகளுக்கு நீர்சரிவர கிடைக்காததால் வேளாண்மை உற்பத்தி வெகுவாக பாதிக்கப்படுகிறது. பயன்பெறும் விவசாயிகள் பாசன அமைப்பு முறைகளை பேணுவதிலும் இயக்குவதிலும் பங்கு கொள்ளாததே இதற்கு முக்கிய காரணமாகும் என்று உலகளவில் கண்டறியப்பட்டு உள்ளது.

மேலாண்மை திட்டம்

வேளாண்மை உற்பத்தியை பல மடங்கு பெருக்க, விவசாயிகளை அந்த பணியில் ஈடுபட செய்ய வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றன. அதன்படி பாசன மேலாண்மை பணிகளில் விவசாயிகளும் பங்கேற்க வேண்டும் என்பதன் அடிப்படையில் 16-வது ஐந்தாண்டு திட்ட காலத்தில் பாசன துறையில் செயல்படுத்த உள்ள வழிமுறைகள், பாசன அமைப்புகளின் பராமரிப்பு மற்றும் வருவாயை உற்பத்திப்படுத்தும் பொறுப்புகளை நீரினை பயன்படுத்துவோர் சங்கங்களின் ஒப்படைத்தலுக்கு முக்கியத்துவம் கொடுத்து உள்ளது. விவசாயிகள் நீர்பாசன அமைப்பு முறை மேலாண்மை சட்டத்தை தெரிந்து கொள்ள வேண்டும். நீர்பாசன அமைப்பு முறைகளின் மேலாண்மையில் விவசாயிகளை கலந்துகொள்ள செய்வதே இந்த திட்டத்தின் நோக்கமாகும். இந்த சட்டத்தை பாசன சங்க தலைவர்கள், ஆட்சி மன்ற குழு உறுப்பினர்கள் தெரிந்து கொள்வதற்கு இந்த பயிற்சி முகாம் நடத்தப்படுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story