கைதான ஷாரூக் ஷபி கோவையிலும் சதி செய்ய திட்டமிட்டாரா?


கைதான ஷாரூக் ஷபி கோவையிலும் சதி செய்ய திட்டமிட்டாரா?
x
தினத்தந்தி 14 April 2023 12:15 AM IST (Updated: 14 April 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

கேரளாவில் ரெயில் பயணிகளை எரித்து கொன்ற வழக்கில் கைதான ஷாரூக் ஷபி கோவையிலும் சதி செய்ய திட்டமிட்டாரா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோயம்புத்தூர்

கேரளாவில் ரெயில் பயணிகளை எரித்து கொன்ற வழக்கில் கைதான ஷாரூக் ஷபி கோவையிலும் சதி செய்ய திட்டமிட்டாரா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பயணிகள் எரித்து கொலை

கேரள மாநிலம் ஆலப்புழாவில் இருந்து கண்ணூர் நோக்கி கடந்த 2-ந் தேதி எக்ஸ்பிரஸ் ரெயில் சென்றது. இந்த ரெயிலில் பயணித்த ஒரு குழந்தை உள்பட 3 பயணிகள் பெட்ரோல் ஊற்றி எரித்து கொல்லப்பட்டனர்.

இது தொடர்பாக கேரள போலீசார் வழக்குப்பதிவு செய்து, டெல்லி ஷாகின் பாக்கை சேர்ந்த ஷாரூக் ஷபி (24) என்பவரை கைது செய்தனர்.

கோவை கார் குண்டு வெடிப்பு

இந்த சம்பவத்திற்கு பின்னணியில் தீவிரவாத கும்பலுக்கு தொடர்பு இருக்கலாம் என்பதால் என்.ஐ.ஏ. அதிகாரிகளும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கடந்த ஆண்டு தீபாவளிக்கு முந்தைய நாளான அக்டோபர் 23-ந் தேதி கோவை கோட்டைமேடு, ஈஸ்வரன் கோவில் முன்பு கார் வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. இதில் காரை ஓட்டி வந்த ஜமேஷா முபின் உயிரிழந்தார்.

விசாரணையில், முபின் ஐ.எஸ். அமைப்பின் ஆதரவாளர் என்பதும், மக்களை கொல்லும் நோக்கில் காரில் வெடி பொருளை நிரப்பி கார் வெடிப்பு சம்பவத்தை அரங்கேற்ற திட்டமிட்டதும் தெரியவந்தது.

ஒரே வகையான தாக்குதல்

இதேபோல் கடந்த நவம்பர் மாதம் கர்நாடக மாநிலம் மங்களூ ருவில் குக்கர் குண்டு வெடித்தது. இது தொடர்பாக ஷாரிக் என்ப வர் கைது செய்யப்பட்டார்.

அவர் கோவைக்கு வந்து தங்கியதும், இங்கு பல்வேறு இடங்களை நோட்டமிட்டதும் கண்டறியப்பட் டது. இந்த 2 வழக்குகளை என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரித்து வரு கின்றனர்.

இந்த வழக்கு தொடர்பாக சிலரை கைதும் செய்து உள்ளனர். இந்த வழக்குகள் குறித்த விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் கேரளாவில் ரெயில் பயணிகள் எரித்து கொல்லப்பட்ட சம்பவமும், கோவை, கர்நாடகாவில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவங்கள் என இந்த 3 சம்பவங்களும் ஒரே வகையிலான தாக்குதலாக இருப்பதால், கேரளாவில் ரெயில் பயணிகளை எரித்து கொன்ற வழக்கில் கைதாகி உள்ள ஷாரூக் ஷபிக்கு கோவையில் யாருடனாவது தொடர்பு உள்ளதா? என கோவை மாநகர போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

கோவைக்கு வந்தாரா?

இது குறித்து கோவை மாநகர போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

கடந்த சில மாதங்களாக தென் மாநிலங்களில் பொதுமக்களை குறிவைத்து பயங்கரவாதிகள் இதுபோன்ற தாக்குதலை அரங் கேற்றி வருகின்றனர்.

ஷாரூக் ஷபி கோவைக்கோ, தமிழகத்தின் பிற பகுதிக்கோ வந்து சென்றாரா? இங்கு யாரையாவது சந்தித்தாரா? என்று விசாரித்து வருகிறோம்.

சைபர் கிரைம் போலீசார் தொலை தொடர்பு நிறுவனங்கள், இணைய நெறிமுறை விவரப்பதிவு முறை ஆகியவற்றின் மூலம் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். அந்த 3 சம்பவங்களி லும் உள்ள தொடர்புகள் குறித்து ஆய்வு செய்து வருகிறோம்.

100 அழைப்புகள் ஆய்வு

மேலும் ஷபியின் செல்போன் எண், வாட்ஸ் அப்பையும் ஆய்வு செய்து வருகிறோம். அதில் அவர் யார், யாரிடம் எல்லாம் பேசினார். அவர்களுடன் என்ன தொடர்பு, அவர்களின் பின்புலம் என்ன? கார் வெடிப்பில் கைதானவர்கள் மற்றும் அவர்களது ஆதரவாளர்களுடன் பேசினாரா? அவர்களுடன் தொடர்பு உள்ளதா? என்பது குறித்து விசாரித்து வருகிறோம்.

இதுவரை 100-க்கும் மேற்பட்ட அழைப்புகளை ஆராய்ந்து உள்ளோம். செல்போன் மட்டுமின்றி பிரத்யேக செயலி மூலம் பேசி உள்ளனரா? முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலம் தொடர்பில் இருந்தனரா? என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

கார் வெடிப்பில் தொடர்பா?

கோவை போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் கூறும்போது, கேரள ரெயில் பயணிகள் எரிப்பு சம்பவம் தொடர்பான விசார ணை நடவடிக்கைகளை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். ஷபிக்கும், கார் வெடிப்பு சம்பவத்தில் ஈடுபட்டவர்களுக்கும் தொடர்பு உள்ளதா? என்பது குறித்து விசாரித்து வருகிறோம் என்றார்.


Next Story