அ.தி.மு.க.வில் புதிய உறுப்பினர்களை சேர்க்க விண்ணப்பங்கள் வழங்கல்


அ.தி.மு.க.வில் புதிய உறுப்பினர்களை சேர்க்க விண்ணப்பங்கள் வழங்கல்
x

அ.தி.மு.க.வில் புதிய உறுப்பினர்களை சேர்க்க விண்ணப்பங்கள் வழங்கப்பட்டது.

அரியலூர்

அரியலூர் மாவட்ட அ.தி.மு.க. அலுவலகத்தில் புதிய உறுப்பினர்களை சேர்க்க விண்ணப்பங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் மாவட்ட துணை செயலாளர் ராம ஜெயலிங்கம் வரவேற்று பேசினார். முன்னாள் மாவட்ட செயலாளர் இளவரசன் முன்னிலை வகித்தார். அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் தாமரை ராஜேந்திரன் விண்ணப்ப படிவங்களை வழங்கி பேசியதாவது:- புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கட்சியை பலப்படுத்தும் விதமாக ஒன்றரை கோடி தொண்டர்கள் கொண்ட இயக்கத்தை இரண்டு கோடி தொண்டர்கள் கொண்ட இயக்கமாக மாற்ற வேண்டும் என்று முடிவு செய்து அறிவித்தார். குறைந்த நாட்களில் நமது இலக்கை எட்ட வேண்டும் என்று கூறி உள்ளார். அதன் அடிப்படையில் அரியலூர் மாவட்டத்தில் உள்ள 10 ஊராட்சி ஒன்றியங்கள், 2 நகராட்சி, 2 பேரூராட்சியில் உள்ள அனைத்து பொறுப்பாளர்களிடம் புதிய உறுப்பினர் விண்ணப்ப படிவம் வழங்கப்பட்டுள்ளது. அதில் புதிய உறுப்பினர்கள் மட்டுமல்லாமல், பழைய உறுப்பினர்களையும் இணைத்து விரைவாக பணிகளை முடித்து, தமிழகத்தில் அதிகமாக உறுப்பினர்கள் சேர்த்த மாவட்டம் அரியலூர் என்று பெயரை வாங்க வேண்டும் என்று கூறினார். இந்த நிகழ்ச்சியில் பொருளாளர் அன்பழகன், தங்க பிச்சைமுத்து, ஒன்றிய செயலாளர் செல்வராஜ், பாலசுப்பிரமணியம், அரியலூர் நகர செயலாளர் செந்தில், கல்லங்குறிச்சி பாஸ்கர், தாமரைகுளம் ஊராட்சி மன்ற தலைவர் பிரேம்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story