ஐ.டி. ஊழியரை தாக்கிய 4 பேர் மீது வழக்கு
ஐ.டி. ஊழியரை தாக்கிய 4 பேர் மீது வழக்கு
சரவணம்பட்டி
கோவை ராம்நகர் பஜனை கோவில் தெருவைச் சேர்ந்தவர் மனு பிரசாத் (29). இவர் பெங்களூருவில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார்.. தற்போது அவர்வீட்டிலிருந்து ஆன்லைன் மூலம் வேலை பார்த்து வருகிறார். மேலும் இவர் எல்.ஜி.பி. நகர் பகுதியில் இ-சேவை மையம் நடத்தி வருகிறார். இந்தநிலையில் நேற்று முன்தினம் மனுபிரசாத் தனது நண்பர் மயில்வாகனம் என்பவருடன் இ-சேவை மையம் அருகில் உள்ள பேக்கரிக்கு டீ குடிக்கச் சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த 4 பேர் மது போதையில் மனுபிரசாத் மற்றும் மயில்வாகனத்திடம் தகராறு செய்துள்ளனர்.
இதில் தகராறு முற்றியதால் 4 பேரும் சேர்ந்து மனு பிரசாத் மற்றும் அவரது நண்பர் மயில்வாகனத்தை உருட்டுக்கட்டையால் தாக்கியுள்ளனர். இதில் மனுபிரசாத்துக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். இது குறித்து சரவணம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து தகராறில் ஈடுபட்ட சரவணம்பட்டி பகுதியைச் சேர்ந்த பழனிகுமார், ஜான்ராஜ், மகேஸ்வரன், ராஜாராம் ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்