விடிய, விடிய கொட்டி தீர்த்த கனமழை


விடிய, விடிய கொட்டி தீர்த்த கனமழை
x

நொய்யல் பகுதியில் விடிய, விடிய கனமழை கொட்டி தீர்த்தது.

கரூர்

நொய்யல், குறுக்குச்சாலை, குந்தாணிபாளையம், நத்தமேடு,புன்னம்சத்திரம், புன்னம், பசுபதிபாளையம், ஓலப்பாளையம், தவிட்டுப்பாளையம், பாலத்துறை, சேமங்கி உள்பட பல்வேறு பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு தொடங்கிய மழை நேற்று காலை வரை விடிய, விடிய கொட்டி தீர்த்தது. இதனால் சாலைகளில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்றன. தொடர் மழையால் விவசாய பயிர்கள் செழித்து வளரும் நிலை ஏற்பட்டுள்ளது. அதேபோல் கிணறுகளில் ஊற்று எடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


Next Story