பொறுப்பேற்று 14 மாதங்கள் ஆகியும் தி.மு.க. அரசு எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை ; பெருந்துறையில் எடப்பாடி பழனிசாமி பேச்சு


பொறுப்பேற்று 14 மாதங்கள் ஆகியும்  தி.மு.க. அரசு எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை ;  பெருந்துறையில் எடப்பாடி பழனிசாமி பேச்சு
x

தி.மு.க. அரசு பொறுப்பேற்று 14 மாதங்கள் ஆகியும் எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை என பெருந்துறையில் தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

ஈரோடு

பெருந்துறை

தி.மு.க. அரசு பொறுப்பேற்று 14 மாதங்கள் ஆகியும் எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை என பெருந்துறையில் தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

நிறைவேற்றவில்லை

அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி, நேற்று திண்டுக்கல் மாவட்டம் பழனியில் இருந்து தாராபுரம், காங்கேயம், ஈரோடு மாவட்டம் சென்னிமலை வழியாக பெருந்துறைக்கு காரில் வந்தார்.

பின்னர் பொதுமக்கள் மற்றும் கட்சியினர் மத்தியில் எடப்பாடி பழனிசாமி பேசும்போது கூறியதாவது:-

கடந்த 2021 சட்டமன்ற தேர்தலின் போது, நிறைவேற்ற முடியாத பல வாக்குறுதிகளை அளித்து, தி.மு.க. ஆட்சியை பிடித்தது. ஆனால் தி.மு.க. அரசு பதவி ஏற்ற 14 மாதங்கள் ஆகியும், தாங்கள் கூறிய வாக்குறுதிகளை நிறைவேற்ற வில்லை. குடும்ப தலைவிகளுக்கு, மாதம் தோறும் ரூ.1,000 வழங்குவோம் என்றார்கள். அதை இன்றளவும் செயல்படுத்த வில்லை. சமையல் எரிவாயு விலையை குறைப்போம் என்றார்கள். ஆனால் அதையும் அவர்கள் நிறைவேற்றவில்லை.

ஆதரிப்பார்கள்

அத்திக்கடவு -அவினாசி திட்டம் நியாயப்படி, கடந்த 6 மாதங்களுக்கு முன்பே நிறைவேறி இருக்க வேண்டும். ஆனால் வேண்டும் என்றே, அந்த திட்டத்தை இன்றளவும் நிறைவேற்றாமல் தி.மு.க. அரசு காலம் கடத்தி வருகிறது. மேலும் பெருந்துறை தொகுதியின் தாகம் தீர்க்கும் திட்டமான கொடிவேரி கூட்டுக்குடிநீர் திட்டமும், இன்றுவரை மக்களின் பயன்பாட்டுக்கு வந்து சேரவில்லை.

பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்றிய அ.தி.மு.க.வை, அடுத்து வரும் சட்டமன்ற தேர்தலில் மக்கள் நிச்சயம் ஆதரிப்பார்கள் என்கிற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

1 More update

Related Tags :
Next Story