ஆளுங்கட்சியான பிறகு மக்களை கண்டு கொள்ளாதது தி.மு.க.விற்கு வாடிக்கை-ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ.பேட்டி


ஆளுங்கட்சியான பிறகு மக்களை கண்டு கொள்ளாதது தி.மு.க.விற்கு வாடிக்கை-ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ.பேட்டி
x

ஆளுங்கட்சி ஆன பிறகு மக்களை கண்டுகொள்ளாமல் இருப்பது தி.மு.க.விற்கு வாடிக்கை என்று ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. தெரிவித்தார்.

மதுரை

திருப்பரங்குன்றம்,

ஆளுங்கட்சி ஆன பிறகு மக்களை கண்டுகொள்ளாமல் இருப்பது தி.மு.க.விற்கு வாடிக்கை என்று ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. தெரிவித்தார்.

அண்ணா நினைவு நாள்

திருப்பரங்குன்றத்தில் மதுரை புறநகர் அ.தி.மு.க. கிழக்கு மாவட்டம் சார்பில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி 16 மண்டபம் வளாகத்தில் பேரறிஞர் அண்ணாவின் உருவப்படம் அலங்கரித்து பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு இருந்தது.

நிகழ்ச்சிக்கு மதுரை புறநகர் அ.தி.மு.க. கிழக்கு எம்.ஜி.ஆர். இளைஞர் அணி மாவட்ட செயலாளர் வக்கீல் ரமேஷ் தலைமை தாங்கினார். திருப்பரங்குன்றம் ஒன்றிய செயலாளர் நிலையூர் முருகன் முன்னிலை வகித்தார்.

நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கட்சியின் அமைப்பு செயலாளரும், மாவட்டச்செயலாளருமான ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ.கலந்து கொண்டு அண்ணாவின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்து வணங்கினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட துணைச் செயலாளர் ஓம்.கே.சந்திரன், கலை இலக்கிய பிரிவு மாவட்ட செயலாளர் கவிஞர் மோகன்தாஸ், பகுதி செயலாளர் பன்னீர்செல்வம், துணைச் செயலாளர் செல்வகுமார், முன்னாள் பேரூராட்சி துணைத் தலைவர் பாண்டுரங்கன், வட்டச்செயலாளர்கள் பொன் முருகன், பாலா, திருநகர் பாலமுருகன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சாக்கிலிப்பட்டி பாலமுருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியை தொடர்ந்து ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ.நிருபர்களிடம் கூறியதாவது:-

தி.மு.க.விற்கு வாடிக்கை

தி.மு.க. எதிர்க்கட்சியாக இருக்கும் போது மட்டுமே மக்களைப் பற்றி கவலைப்படுவது போல வெளிப்பாடு இருக்கும். ஆனால் ஆளுங்கட்சியான பிறகு மக்களை கண்டு கொள்வதில்லை. அது தி.மு.க.வாடிக்கை. ஆனால்அ.தி.மு.க. ஆளும்கட்சியாக இருக்கும்போதும் சரி, எதிர்க்கட்சியாக இருக்கும் போதும் சரி மக்களைப்பற்றியே சிந்திப்பது, மக்களுக்கான திட்டங்களைசெயல்படுத்துவது, மக்களுக்காக போராடுவது என்று செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.


Related Tags :
Next Story