பவானிசாகர் அருகே அட்டகாசம் செய்து வரும்காட்டு யானையை தேடும் பணி தீவிரம்


பவானிசாகர் அருகே அட்டகாசம் செய்து வரும்காட்டு யானையை தேடும் பணி தீவிரம்
x

பவானிசாகர் அருகே அட்டகாசம் செய்து வரும் காட்டு யானையை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

ஈரோடு

பவானிசாகர்

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்குட்பட்ட விளாமுண்டி வனப்பகுதியில் இருந்து காட்டு யானை ஒன்று வெளியேறி கிராமத்துக்குள் புகுந்து பொதுமக்களை அச்சுறுத்தியும், பயிர்களை சேதப்படுத்தியும் வருகிறது. இதைத்தொடர்ந்து இந்த யானையை பிடிக்க ஆனைமலை புலிகள் காப்பகத்தில் இருந்து 2 கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டன.

இதையடுத்து நேற்று வனத்துறையினர் விளாமுண்டி வனப்பகுதியில் அடர்ந்த வனத்துக்குள் 10 கிலோமீட்டர் தூரம் சென்று அட்டகாசம் செய்து வரும் யானையை தேடினார்கள். ஆனால் அந்த யானையை கண்டுபிடிக்க முடியவில்லை. தொடர்ந்து அந்த யானையை தேடும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.


Next Story