ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்பட வாய்ப்பு என தகவல்


ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்பட வாய்ப்பு என தகவல்
x

ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்பட வாய்ப்பு என தகவல் வெளியாகியுள்ளது.

ஈரோடு

ஈரோடு,

ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. திருமகன் ஈவெரா கடந்த 4-ந் தேதி திடீரென மரணம் அடைந்தார். இதையடுத்து இந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. ஈரோடு கிழக்கு தொகுதியில் கடந்த முறை தி.மு.க. கூட்டணியில் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் காங்கிரசுக்கே ஒதுக்கப்படுமா? அல்லது தி.மு.க.வே போட்டியிடுமா? என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்த இடைத்தேர்தலில் போட்டியிட தி.மு.க., காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் தீவிரம் காட்டிவருகிறார்கள். இடைத்தேர்தல் என்பதால் எப்படியும் வெற்றி பெற்று விடலாம் என்று தீவிரமாக உள்ளனர்.

இந்த நிலையில், நாகலாந்து, மேகாலயா, திரிபுரா ஆகிய 3 மாநிலங்களில் பதவிக்காலம் மார்ச் மாதம் முடிவடைய உள்ளது. இதையடுத்து இந்த 3 மாநிலங்களிலும் தேர்தல் நடத்தப்படவுள்ளது. இந்த 3 மாநிலங்களுக்கான தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்படுகிறது.

இந்திய தலைமை தேர்தல் கமிஷனர் ராஜீவ் குமார் இன்று பிற்பகல் 2.30 மணிக்கு செய்தியாளர்கள் சந்திப்பில் 3 மாநிலங்களுக்கான தேர்தல் தேதியை அறிவிக்கிறார். இந்த செய்தியாளர் சந்திப்பில் ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


Next Story