கரூரில் தொடரும் ஐடி ரெய்டு - துணை மேயர் வீட்டில் சோதனை...!


கரூரில் தொடரும் ஐடி ரெய்டு -  துணை மேயர் வீட்டில் சோதனை...!
x

கரூர் மாநகராட்சி துணை மேயர் வீட்டில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

கரூர்,

வரி ஏய்ப்பு புகாரின் அடிப்படையில் தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று முன் தினம் முதல் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை, கோவை, கரூர், கேரள மாநிலம் பாலக்காடு, கர்நாடக மாநிலம் பெங்களூரு, ஆந்திர மாநிலம் ஐதராபாத்திலும் வருமான வரித்துறை அதிரடி சோதனை மேற்கொண்டுள்ளனர். குறிப்பாக மின்சாரத்துறை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சரான செந்தில்பாலாஜிக்கு தொடர்புடையவர்களின் வீடுகளில் இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது.

அந்த வகையில், கரூரில் சில பகுதிகளில் 3-வது நாளாக வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், கரூர் மாநகராட்சி துணைமேயர் தாரணி சரவணன் வீட்டில் இன்று வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

ராயனூர் பகுதியில் உள்ள அவரது வீட்டில் இன்று 8-க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

1 More update

Related Tags :
Next Story