ஐ.டி. நிறுவன அதிகாரி வீட்டில் 37 பவுன் நகை, பணம் திருட்டு
சிங்காநல்லூரில் ஐ.டி. நிறுவன அதிகாரி வீட்டில் 37 பவுன் நகை-பணம் திருட்டு போனது. மேலும் அங்குள்ள2 வீடுகளில் மர்ம நபர்கள் கைவரிசை காட்டினர்.
சிங்காநல்லூர்
சிங்காநல்லூரில் ஐ.டி. நிறுவன அதிகாரி வீட்டில் 37 பவுன் நகை-பணம் திருட்டு போனது. மேலும் அங்குள்ள2 வீடுகளில் மர்ம நபர்கள் கைவரிசை காட்டினர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
ஐ.டி.நிறுவன அதிகாரி
கோவை சிங்காநல்லூர் நீலி கோணாம்பாளையம் நேதாஜி புரத் தை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 37). இவர் பெங்களூருவில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் மனிதவள மேம்பாட்டு அதிகாரியாக வேலை பார்த்து வருகிறார்.
இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் திருச்சிக்கு சென்றார். இந்தநிலையில் இவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது.
இதை பார்த்த பக்கத்து வீட்டை சேர்ந்த மகேஸ்வரி என்பவர் ரமேசுக்கு தகவல் கொடுத்தார். உடனே ரமேஷ் வீட்டிற்கு வந்து பார்த்தபோது பீரோவில் இருந்த 37 பவுன் நகைகள் பணம் ரூ.13 ஆயிரம் ஆகியவை திருட்டுபோனது ெதரிய வந்தது.
இது குறித்த புகாரின் பேரில் சிங்கநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தண்ட பாணி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
மற்றொரு வீடு
பீளமேடு, ஹட்கோ காலனி, முருகன் நகரை சேர்ந்தவர் கணேசன். இவருடைய மகன் லோகேஷ்குமார் (22) இவர் வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் தர்மபுரி சென்றார்.
அவர் திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த ரூ1 லட்சத்து 85 ஆயிரம் பணம், ½ பவுன் தங்க நகை ஆகியவற்றை காணவில்லை. யாரோ திருடி சென்றது தெரிய வந்தது.
இது குறித்த புகாரின் பேரில் பீளமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
துபாய்க்கு சென்றவர் வீடு
சிங்காநல்லூர் எஸ்.ஐ.எச்.எஸ். காலனி சீனிவாசா நகரில் ஒரு வீடு பூட்டிக் கிடந்தது. இந்த வீட்டின் உரிமையாளர் துபாயில் வேலை பார்த்து வருகிறார். அவரது உறவினர் தேவராஜ் என்பவர் அந்த வீட்டை பராமரித்து வருகிறார்.
இந்த நிலையில் அந்த வீட்டின் முன்கதவு பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் அங்கிருந்த தங்கக்காசு, தங்க கம்மல் மற்றும் வெள்ளி சாமான்கள், ரூ.25 ஆயிரத்தை திருடி சென்று விட்டனர்.
இது குறித்த புகாரின் பேரில் சிங்காநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சிங்காநல்லூர் பகுதியில்3 வீடுகளில் மர்ம நபர்கள் கைவரிசை காட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.