பெரம்பலூரில் புத்தக திருவிழா நடத்த முடிவு


பெரம்பலூரில் புத்தக திருவிழா நடத்த முடிவு
x
தினத்தந்தி 2 March 2023 8:26 PM GMT (Updated: 3 March 2023 11:06 AM GMT)

பெரம்பலூரில் புத்தக திருவிழா நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

பெரம்பலூர்

பெரம்பலூரில் புத்தக திருவிழா நடத்தப்படுவது குறித்து அனைத்து துறை அரசு அலுவலர்களுடனான முதற்கட்ட ஆலோசனைக்கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் கற்பகம் தலைமை தாங்கி பேசுகையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாவட்டந்தோறும் புத்தக திருவிழா நடத்தப்பட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். அதன் பேரில் பெரம்பலூர் மாவட்டத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சரின் ஒப்புதலை பெற்று, இந்த மாத இறுதியில் பெரம்பலூர் நகராட்சி அலுவலக வளாகத்தில் புத்தகத்திருவிழா நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகமும், பெரம்பலூர் மக்கள் பண்பாட்டு மன்றமும் இணைந்து நடத்தவுள்ள புத்தக திருவிழாவில் 100-க்கும் மேற்பட்ட பதிப்பகத்தாரின் அரங்குகள் அமைக்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த புத்தக திருவிழாவில் தமிழ்நாட்டின் தலைசிறந்த பேச்சாளர்கள், இலக்கியவாதிகள், எழுத்தாளர்கள், கவிஞர்கள், கலைஞர்கள் பங்குபெற உள்ளார்கள். பொதுமக்களுக்கும், சிறுவர்களுக்கும், பள்ளி கல்லூரி மாணவ -மாணவிகளுக்கும் பெரிதும் பயன்படும் வகையில் புத்தகத்திருவிழா நடத்தப்படவுள்ளது. ஒவ்வொரு துறையின் சார்பிலும் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும் பணிகளை சம்பந்தப்பட்ட அரசுத்துறை அலுவலர்கள் அர்ப்பணிப்பு உணர்வுடன் மேற்கொள்ள வேண்டும், என்றார்.


Next Story