27 மையங்களில் நாளை நடக்கிறது


27 மையங்களில் நாளை நடக்கிறது
x

காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு எழுத்துத்தேர்வு நாளை 27 மையங்களில் நடக்கிறது.

விருதுநகர்

காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு எழுத்துத்தேர்வு நாளை 27 மையங்களில் நடக்கிறது.

எழுத்துத்தேர்வு

விருதுநகர் மாவட்டத்தில் காலியாக உள்ள 114 கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு இணையதளம் மூலம் பெறப்பட்ட விண்ணப்பங்களில் ஏற்றுக்கொள்ளப்பட்ட மற்றும் நிராகரிக்கப்பட்ட விண்ணப்பங்களின் விவரங்கள் விருதுநகர் மாவட்ட வலைதளப்பக்கத்திலும், தாலுகா அலுவலகங்களின் அறிவிப்பு பலகையிலும் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. மேலும் நாளை நடைபெறவிருக்கும் எழுத்து தேர்வுக்கான நுழைவுச்சீட்டானது மேற்படி விண்ணப்பதாரரின் செல்போனிற்கு குறுஞ்செய்தியாக அனுப்பப்பட்டுள்ளது.

மின்னஞ்சல் முகவரி வழியாகவும் பதிவிறக்கம் செய்யலாம் அல்லது விண்ணப்பதாரர் தமிழக அரசு இணையதளம் வருவாய் மற்றும் நிர்வாக துறை இணையதளம் மற்றும் விருதுநகர் மாவட்ட இணையதளம் ஆகியவற்றின் வழியாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் தேர்வு மையங்களில் அமைக்கப்பட்டுள்ள உதவி மையங்களிலும் நுழைவுச்சீட்டினை பதிவிறக்கம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

27 மையங்கள்

மாவட்டத்தில் கீழ்கண்ட 27 மையங்களில் தேர்வு நடைபெற உள்ளது. விருதுநகர் கே.வி.எஸ். ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, ஹாஜிபி செய்யது முகமது மேல்நிலைப்பள்ளி, சாத்தூர் எஸ்.ஹெச்.என்.வி. மேல்நிலைப்பள்ளி, வெம்பக்கோட்டை பி.எஸ்.ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரி, செவல்பட்டி சேது என்ஜினீயரிங் கல்லூரி, சிவகாசி எஸ்.ஹெச்.என். மேல்நிலைப்பள்ளி, எஸ்,ஹெச்,என், பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ராஜபாளையம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி.

ராஜபாளையம் எஸ்.எஸ். அரசு மேல்நிலைப்பள்ளி, ஏ.கே.டி. அன்னமராஜா பெண்கள் மேல்நிலைப்பள்ளி, நாடார் மேல்நிலைப்பள்ளி, என்.ஏ. அன்னப்பராஜா நினைவு மேல்நிலைப்பள்ளி, ஸ்ரீவில்லிபுத்தூர் இந்து மேல்நிலைப்பள்ளி, லயன்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, தியாகராஜா மேல்நிலைப்பள்ளி, திருச்சுழி டி.யு.என்.எஸ்.வி. மேல்நிலைப்பள்ளி, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சேதுபதி மேல்நிலைப்பள்ளி, அரசு மேல்நிலைப்பள்ளி.

அருப்புக்கோட்டை

தமிழ்பாடி ஆசியா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, வீரசோழன் மருது பாண்டியர் அரசு மேல்நிலைப்பள்ளி, வத்திராயிருப்பு இந்து பெண்கள் உயர்நிலைப்பள்ளி, இந்து மேல்நிலைப்பள்ளி, அருப்புக்கோட்டை எஸ்.பி.கே. பெண்கள் மேல்நிலைப்பள்ளி, எஸ்.பி.கே. ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, தேவாங்கர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, தேவாங்கர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி.

தேர்வர்கள் தேர்வு கூடத்திற்கு நாளை காலை 9.15 மணிக்குள் நுழைவு சீட்டுடன் வரவேண்டும். கருப்பு நிற மையிலான பேனாவினால் மட்டுமே தேர்வு எழுத வேண்டும். தேர்வர்கள் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள நுழைவு சீட்டில் குறிப்பிட்டுள்ள அறிவுரைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும்.

கட்டுப்பாட்டு அறை

தேர்வு குறித்து தேர்வர்களுக்கு உதவிடும் வகையில் கலெக்டர் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.

தேர்வு கட்டுப்பாட்டு அறை எண் 04562 252 600,252 604 ஆகிய டெலிபோன் எண்களில் தொடர்பு கொண்டு தங்களுக்கு தேவையான தகவல்களை கேட்டு தெரிந்து கொள்ளலாம். மேற்கண்ட தகவலை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.


Next Story