அரசினர் தொழில் பயிற்சி நிலையத்தில் சுற்றுச்சுவர் சுவர் கட்டப்படுமா?


அரசினர் தொழில் பயிற்சி நிலையத்தில் சுற்றுச்சுவர் சுவர் கட்டப்படுமா?
x
திருப்பூர்


தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் கீழ் செயல்பட்டு வரும் அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் உடுமலை அருகே எலையமுத்தூர் சாலையில் செயல்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி அரசு உதவிகளுடன் பயிற்சியின்போது தொழில் நிறுவனங்களில் உதவித்தொகையுடன் பயிற்சி, பயிற்சி முடித்தவுடன் மத்திய மாநில அரசு நிறுவனங்களில் வேலை வாய்ப்பு, மாதாந்திர உதவித் தொகையும் வழங்கப்படுவதால் ஏராளமான மாணவர்கள் ஆர்வத்தோடு சேர்ந்து படித்து வருகின்றனர். ஆனால் இந்தத்தொழில் பயிற்சி நிலையத்தை சுற்றிலும் காம்பவுண்ட் சுவர் கட்டப்படவில்லை. இதனால் போதை ஆசாமிகள் அத்து மீறலில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் குடிபோதையில் பாட்டில்களை உடைத்து தொழில் பயிற்சி நிலைய வளாகத்தில் பரவலாக வீசியும் வருகின்றனர். இதனால் மாணவர்களுக்கு இடையூறு ஏற்பட்டு வருகிறது.பல லட்ச ரூபாய் செலவில் கட்டப்பட்ட இந்த கட்டிடம் காம்பவுண்ட் சுவர் இல்லாத காரணத்தினால் பாதுகாப்பற்று திறந்த வெளியாக உள்ளது. நுழைவு வாயிலிலை கட்டி அதற்கு கேட் போட்டு பூட்டி வைத்து உள்ளனர். ஒரு வேளை காம்பவுண்டு சுவர் கட்டப்பட்டது போன்று கணக்கு காட்டப்பட்டதா என்பதும் தெரியவில்லை. இதுகுறித்து அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டியதும் அவசியமாகும். எனவே உடுமலை எலையமுத்துர் சாலையில் செயல்பட்டு வரும் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தை சுற்றிலும் காம்பவுண்ட் சுவர் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.


Next Story