சேரன்மாதேவி உதவி கலெக்டருக்கு இசக்கி சுப்பையா எம்.எல்.ஏ. நன்றி
கன்னடியன் கால்வாயில் கூடுதலாக தண்ணீர் திறக்கப்பட்டதை ெதாடர்ந்து சேரன்மாதேவி உதவி கலெக்டருக்கு இசக்கி சுப்பையா எம்.எல்.ஏ. நன்றி தெரிவித்தார்.
சேரன்மாதேவி:
கன்னடியன் கால்வாயில் கூடுதலாக தண்ணீர் திறக்கப்பட்டதை ெதாடர்ந்து சேரன்மாதேவி உதவி கலெக்டருக்கு இசக்கி சுப்பையா எம்.எல்.ஏ. நன்றி தெரிவித்தார்.
பாநாசம் அணை
கடந்த ஆண்டு போதிய பருவமழை பெய்யாததால், பாபநாசம் உள்ளிட்ட அணைகளில் நீர்மட்டம் குறைவாக உள்ளது. வழக்கமாக கார் பருவ சாகுபடிக்கு ஜூன் 1-ந்தேதி அணையில் தண்ணீர் திறக்கப்படும். இந்த ஆண்டு அணையில் தண்ணீர் குறைவாக இருந்ததால் தாமதமாக கடந்த 19-ந்தேதி அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. வினாடிக்கு 250 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டதால் கடைமடை வரை தண்ணீர் செல்ல இயலாத நிலை ஏற்பட்டது.
எனவே அணையில் இருந்து கூடுதலாக தண்ணீர் திறக்க வலியுறுத்தி, கன்னடியன் கால்வாய் விவசாயிகள், சேரன்மாதேவி பஸ் நிலையம் அருகில் சாலைமறியல், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்திய சேரன்மாதேவி உதவி கலெக்டர் முகமது சபீர் ஆலம், அணையில் இருந்து கூடுதலாக தண்ணீர் திறக்கப்படும் என்று தெரிவித்தார். இதையடுத்து போராட்டத்தை கைவிட்ட விவசாயிகள் கலைந்து சென்றனர்.
கூடுதல் தண்ணீர் திறப்பு
இந்த நிலையில் பாபநாசம் அணையில் இருந்து கூடுதலாக தண்ணீர் திறக்கப்பட்டு, கன்னடின் கால்வாயில் வினாடிக்கு 350 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதையடுத்து இசக்கி சுப்பையா எம்.எல்.ஏ. தலைமையில் விவசாயிகள், சேரன்மாதேவி உதவி கலெக்டர் முகமது சபீர் ஆலமை நேற்று நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
கன்னடியன் கால்வாய் விவசாயிகள் சங்க தலைவர் பாபநாசம், செயலாளர் கண்ணப்பநயினார், அ.தி.மு.க. மாவட்ட இலக்கிய அணி செயலாளர் கூனியூர் மாடசாமி, ஒன்றிய செயலாளர் மாரிச்செல்வம், நகர செயலாளர் வக்கீல் பழனிக்குமார், மணிமுத்தாறு முன்னாள் பேரூராட்சி தலைவர் சிவன்பாபு, சேரன்மாதேவி முன்னாள் நகர செயலாளர் ஐசக் பாண்டியன், மகாராஜன், செல்வகுமார், நம்பி மற்றும் பலர் உடன் இருந்தனர்.
கோரிக்கை அஞ்சல் அட்டை
கல்லிடைக்குறிச்சி ெரயில் நிலையத்தில் அனைத்து எக்ஸ்பிரஸ் ெரயில்களும் நின்று செல்ல வலியுறுத்தி நேற்று ெரயில்வே மந்திரி மற்றும் ெரயில்வே துறை அதிகாரிகளுக்கு 5 ஆயிரம் கோரிக்கை அஞ்சல் அட்டை அனுப்பும் நிகழ்ச்சி கல்லிடைக்குறிச்சி ெரயில் நிலையத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அம்பாசமுத்திரம் சட்டமன்ற உறுப்பினர் இசக்கி சுப்பையாவிடம், அமைப்பின் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. மேலும் கோரிக்கை அஞ்சல் அட்டை அனுப்பும் நிகழ்ச்சியை எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் அமைப்பின் தலைவர் உமர்பாருக், துணைத் தலைவர் ஜவஹர், செயலர் விஸ்வநாதன், நிர்வாகிகள் சீதாராமன், ஜான் ஞானராஜ், ஜான் பால்ராஜ், அப்துல் ஸமது, மோகன், ஷெரீப், டாக்டர் பத்மநாபன், பெரிய ஜூம்ஆ பள்ளிவாசல் ஜமாத் தலைவர் அப்துல்மஜித், சத்திரம் தெரு முகைதீன் பள்ளிவாசல் ஜமாத் தலைவர் சாகுல்ஹமீது, சமூக ஆர்வலர் சாஹித் மைதீன், நகர அ.தி.மு.க. செயலர் முத்துகிருஷ்ணன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.