நாகர்கோவிலில் ஜாக்டோ- ஜியோ ஆர்ப்பாட்டம்


நாகர்கோவிலில் ஜாக்டோ- ஜியோ ஆர்ப்பாட்டம்
x

நாகர்கோவிலில் ஜாக்டோ- ஜியோவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

குமரி மாவட்ட ஜாக்டோ- ஜியோ மையம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று மாலை நடந்தது. இதில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும், இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் முதுநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தியாகராஜன் தலைமை தாங்க, ஒருங்கிணைப்பாளர்கள் ரமேஷ், பாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் சுரேஷ்குமார், பெனின் தேவகுமார், பல்வேறு சங்கங்களின் நிர்வாகிகள் கனகராஜ், ஜோஸ் பென்சிகர், அஜின், ஜான்உபால்ட் உள்பட பலர் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள். முடிவில் வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட்ட பொருளாளர் மணிகண்டன் நன்றி கூறினார். ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.


Next Story