ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்


ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்
x

கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்ட ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு சார்பில் தமிழக முதல்-அமைச்சரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும். ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும். முடக்கப்பட்ட அகவிலைப்படி நிலுவை தொகை, சரண்டர், உயர்கல்விக்கான ஊக்க ஊதியம் உள்ளிட்டவற்றை உடனே வழங்க வேண்டும். தொகுப்பூதியம் மற்றும் சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணிபுரிபவர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்துறையில் பணிபுரியும் பணியாளர்கள், ஆசிரியர்கள், பகுதிநேர ஆசிரியர்கள் ஆகியோர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்பிட வேண்டும். சாலை பணியாளர்களுக்கு 41 மாத பணி நீக்க காலத்தினை முறைப்படுத்த வேண்டும். 7-வது ஊதியக்குழுவின் 21 மாத நிலுவை தொகையை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றிட வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.


Next Story