உற்பத்தி அதிகரிப்பால் வெல்லம் விலை வீழ்ச்சி
உற்பத்தி அதிகரிப்பால் வெல்லம் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.
கரூர்
நொய்யல், திருக்காடுதுறை, தவிட்டுப்பாளையம், நஞ்சை புகழூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் ஆயிரக்கணக்கான ஏக்கரில் கரும்பு நடவு செய்துள்ளனர். கரும்பை வெட்டி செல்வதற்காக புகழூரில் உள்ள தனியார் சர்க்கரை ஆலைக்கு பதிவு செய்துள்ளனர். கடந்த வாரம் 30 கிலோ கொண்ட உருண்டை வெல்லம் ஒரு சிப்பம் ரூ.1,350-க்கும், அச்சுவெல்லம் ரூ1,320-க்கும் விற்பனையானது. நேற்று 30 கிலோ கொண்ட உருண்டை வெல்லம் ஒரு சிப்பம் ரூ.1,235-க்கும், அச்சு வெல்லம் ஒரு சிப்பம் ரூ.1,270க்கும் விற்பனையானது. உற்பத்தி அதிகரிப்பால் வெல்லம் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.
Related Tags :
Next Story