சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த காண்டிராக்டருக்கு 15 ஆண்டு சிறை


சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த காண்டிராக்டருக்கு 15 ஆண்டு சிறை
x

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த காண்டிராக்டருக்கு 15 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூர்,

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை அடுத்த சேத்தூர், மேட்டுப்பட்டி பகுதியை சேர்ந்தவர் பிச்சைமாரி (வயது 45), காண்டிராக்டர். இவர் 13 வயது சிறுமிக்கு கடந்த 2019-ம் ஆண்டு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

இதுகுறித்த புகாரின்பேரில் ராஜபாளையம் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிச்சைமாரியை கைது செய்து, ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை நீதிபதி பூர்ண ஜெய ஆனந்த் விசாரித்து, காண்டிராக்டர் பிச்சைமாரிக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.25 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க பரிந்துரை செய்தார்.


Next Story