அனுமதி இன்றி நாட்டுத்துப்பாக்கி பயன்படுத்திய 3 விவசாயிகளுக்கு சிறைத்தண்டனை ராசிபுரம் குற்றவியல் கோர்ட்டு தீர்ப்பு
அனுமதி இன்றி நாட்டுத்துப்பாக்கி பயன்படுத்திய 3 விவசாயிகளுக்கு சிறைத்தண்டனை ராசிபுரம் குற்றவியல் கோர்ட்டு தீர்ப்பு
நாமக்கல்
நாமகிரிப்பேட்டை:
நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை ஒன்றியம் மங்களபுரம் போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2013-ம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த விவசாயிகள் அண்ணாமலை (வயது 31), பழனிசாமி (43), முத்துசாமி (25) ஆகியோர் அனுமதியின்றி நாட்டுத்துப்பாக்கி வைத்து பயன்படுத்தியதாக மங்களபுரம் போலீசார் கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு ராசிபுரம் குற்றவியல் கோர்ட்டில் நடந்தது. இந்த வழக்கில் நேற்று விசாரணை முடிந்து தீர்ப்பளிக்கப்பட்டது. அதில் அரசு அனுமதியின்றி நாட்டுத்துப்பாக்கிகள் வைத்து பயன்படுத்திய அண்ணாமலை, பழனிசாமி, முத்துசாமி ஆகியோருக்கு தலா 2 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் தலா ரூ.1,000 அபராதம் விதித்து நீதிபதி ரெஹனா பேகம் தீர்ப்பு கூறினார்.
Related Tags :
Next Story