மூதாட்டியை தாக்கி 4¼ பவுன் நகை பறிப்பு: தொழிலாளிக்கு 5 ஆண்டு ஜெயில்-பரமத்தி கோர்ட்டு தீர்ப்பு


மூதாட்டியை தாக்கி 4¼ பவுன் நகை பறிப்பு: தொழிலாளிக்கு 5 ஆண்டு ஜெயில்-பரமத்தி கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 1 April 2023 12:30 AM IST (Updated: 1 April 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon
நாமக்கல்

பரமத்திவேலூர்:

ஜேடர்பாளையம் அருகே மூதாட்டியை தாக்கி 4¼ பவுன் நகையை பறித்த தொழிலாளிக்கு 5 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து பரமத்தி கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.

நகை பறிப்பு

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா ஜேடர்பாளையம் அருகே உள்ள அ.குன்னத்தூரை சேர்ந்தவர் சரஸ்வதி (வயது 73). கடந்த 2015-ம் ஆண்டு ஜூலை மாதம் 17-ந் தேதி சரஸ்வதி தனது வீட்டின் பின்புறத்தில் தனியாக இருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர், அவரை தாக்கி கழுத்தில் அணிந்திருந்த 4¼ பவுன் தங்க சங்கிலியை பறித்தார்.

அப்போது சரஸ்வதி அலறியதால், அவரின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். இதனால் அந்த மர்ம நபர் அங்கு கிடந்த பீர் பாட்டிலை உடைத்து, குத்தி விடுவதாக கூறினார். பின்னர் அவர் கரும்பு தோட்டம் வழியாக தப்பி சென்றார்.

5 ஆண்டு ஜெயில்

இந்த சம்பவம் குறித்த புகாரின்பேரில் ஜேடர்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். அதில், சரஸ்வதியை தாக்கி நகை பறித்தது, அதே பகுதியை சேர்ந்த தொழிலாளியான சுரேஷ் (40) என்பது தெரியவந்தது. இதையயடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை பரமத்தி சார்பு கோர்ட்டில் நடைபெற்று வந்தது. நேற்று வழக்கின் விசாரணை முடிந்து தீர்ப்பு கூறப்பட்டது. அதில் சுரேசுக்கு 5 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.1,000 அபராதமும் விதித்து உத்தரவிடப்பட்டது. இதையடுத்து சுரேஷ் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கோவை மத்திய சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார்.


Next Story