சிறுமியிடம் சில்மிஷம் செய்த வாலிபருக்கு 7 ஆண்டு சிறை சேலம் கோர்ட்டு தீர்ப்பு


சிறுமியிடம் சில்மிஷம் செய்த வாலிபருக்கு 7 ஆண்டு சிறை சேலம் கோர்ட்டு தீர்ப்பு
x
சேலம்

சேலம்

சிறுமியிடம் சில்மிஷம் செய்த வழக்கில் வாலிபருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து சேலம் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

சிறுமியிடம் சில்மிஷம்

சேலம் சூரமங்கலம் அருகே உள்ள ஆண்டிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் குபேந்திரன் (வயது 23). இவர் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள ஒரு எலக்ட்ரிக்கல் கடையில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவர் கடந்த 2018-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 12 வயதுடைய 6-ம் வகுப்பு படித்த மாணவி ஒருவரிடம் சில்மிஷம் செய்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அந்த மாணவியின் பெற்றோர் சூரமங்கலம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதையடுத்து சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த குபேந்திரனை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

7 ஆண்டு சிறை

இதுதொடர்பான வழக்கு விசாரணை சேலம் போக்சோ கோர்ட்டில் நடந்தது. இந்த வழக்கில் விசாரணை அனைத்தும் முடிவடைந்ததால் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. இதில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த குற்றத்திற்காக குபேந்திரனுக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி ஜெயந்தி தீர்ப்பு அளித்தார்.


Next Story