பேட்டரி திருடிய வழக்கில் 2 பேருக்கு சிறை தண்டனை


பேட்டரி திருடிய வழக்கில் 2 பேருக்கு சிறை தண்டனை
x
தினத்தந்தி 6 Jan 2023 12:15 AM IST (Updated: 6 Jan 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

பேட்டரி திருடிய வழக்கில் 2 பேருக்கு சிறை தண்டனை

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி

பொள்ளாச்சி அருகே கோமங்கலம் பகுதியில் உள்ள ஒரு செல்போன் கோபுரத்தில் கடந்த 2018-ம் ஆண்டு பேட்டரிகள் திருட்டுபோனது. இந்த வழக்கில் தொடர்புடைய கண்ணன் (வயது 37), பாஸ்கரன் (52) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இது தொடர்பான விசாரணை, பொள்ளாச்சி சப்-கோர்ட்டில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றம் சாட்டப்பட்ட கண்ணனுக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும், பாஸ்கரனுக்கு 4 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.3 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு அளித்தார். இந்த வழக்கில் சிறந்த முறையில் புலன் விசாரணை செய்த அதிகாரி மற்றும் சாட்சிகளை கோர்ட்டில் சிறந்த முறையில் ஆஜர்படுத்திய பெண் போலீசாரை கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் பாராட்டினர்.


Next Story