ஜல் ஜீவன் திட்ட அறிக்கை முறைகேடு; அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை - மதுரை ஐகோர்ட் உத்தரவு


ஜல் ஜீவன் திட்ட அறிக்கை முறைகேடு; அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை - மதுரை ஐகோர்ட் உத்தரவு
x

டெண்டர் ஒப்பந்த விதிகளை மீறி செயல்பட்ட மாவட்ட கலெக்டர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து நிலை அறிக்கை தாக்கல் செய்ய மதுரை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

மதுரை,

புதுக்கோட்டை மாவட்டத்தில் கிராமப்புற குடிநீர் வழங்கல்(ஜல் ஜீவன்) திட்டத்திற்கான திட்ட அறிக்கை தயாரிப்பதற்கு ஒப்பந்த தொகை 96 லட்சத்து 60 ஆயிரத்து 788 ரூபாய் வழங்க உத்தரவிடக்கோரி தனியார் ஒப்பந்த நிறுவனம் சார்பில் முத்துசாமி என்பவர் மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்த போது, தனியார் நிறுவனத்திற்கு சாதகமாக திட்ட அறிக்கை தயார் செய்ததில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விதிமுறைகளை மீறி முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாக ஆய்வுக்குழு அறிக்கை தாக்கல் செய்தது.

இதையடுத்து நீதிபதி, இதுவரை முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என கூறினார். மேலும் டெண்டர் ஒப்பந்த விதிகளை மீறி செயல்பட்ட மாவட்ட கலெக்டர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து நிலை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 23-ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார். மேலும் மாவட்ட திட்ட அலுவலக முகமை இயக்குனர் உள்பட 6 அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.


Next Story