ஜல்லிக்கட்டு வதந்தி - தவறான தகவலை பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் -டிஜிபி எச்சரிக்கை


ஜல்லிக்கட்டு வதந்தி - தவறான தகவலை பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் -டிஜிபி எச்சரிக்கை
x

தவறான தகவலை பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என டிஜிபி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சென்னை,

ஜல்லிக்கட்டு, கம்பாலா, எருது விடுதல் போன்ற விளையாட்டுகளுக்கு எந்த விதமான தடையும் விதிக்கவில்லை என டிஜிபி சைலேந்திர பாபு விளக்கம் அளித்துள்ளார்.

சமூகவலைதளத்தில் பரவும் தகவல் தவறானது எனவும் , எந்த விதமான விளையாட்டுகளுக்கும் தடை விதித்து சுற்றறிக்கை அனுப்பப்படவில்லை என்றும் இதுபோன்ற தவறான தகவலை பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என டிஜிபி சைலேந்திர பாபு எச்சரிக்கை விடுத்துள்ளார்.


Next Story