கடலூர் மாவட்டத்தில் 7-ந் தேதி ஜமாபந்தி தொடக்கம்


கடலூர் மாவட்டத்தில் 7-ந் தேதி ஜமாபந்தி தொடக்கம்
x

கடலூர் மாவட்டத்தில் 7-ந் தேதி முதல் ஜமாபந்தி தொடங்க உள்ளது என்று கலெக்டர் பாலசுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

கடலூர்

கடலூர்,

கடலூர் மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

கடலூர் மாவட்டத்திற்குட்பட்ட 10 தாலுகாக்களுக்குரிய ஜமாபந்தி சம்பந்தப்பட்ட தாலுகா அலுவலகங்களில் வருகிற 7-ந் தேதி முதல் தொடங்கி நடைபெற உள்ளது. அதாவது கடலூரில் மாவட்ட கலெக்டர் தலைமையில் 7-ந் தேதி முதல் 21-ந் தேதி வரையும், புவனகிரியில் கூடுதல் கலெக்டர் (வருவாய்) தலைமையில் 15-ந் தேதி வரையும், குறிஞ்சிப்பாடியில் கோட்டாட்சியர் தலைமையில் 15-ந் தேதி வரையும், சிதம்பரம் மற்றும் திட்டக்குடியில் கோட்டாட்சியர்கள் தலைமையிலும், காட்டுமன்னார்கோவிலில் உதவி ஆணையர் (கலால்) தலைமையிலும் 21-ந் தேதி வரை ஜமாபந்தி நடக்க உள்ளது.

இதேபோல் விருத்தாசலத்தில் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் தலைமையில் 22-ந் தேதி வரைக்கும், பண்ருட்டியில் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் தலைமையில், 21-ந் தேதி வரையிலும், ஸ்ரீமுஷ்ணத்தில் தனித்துணை ஆட்சியர் (முத்திரை தாள்) தலைமையில் 15-ந் தேதி வரையும், வேப்பூரில் நெய்வேலி தனித்துணை ஆட்சியர் (நில எடுப்பு) தலைமையில் 14-ந் தேதி வரையும் நடைபெற உள்ளது. எனவே பொதுமக்கள் பட்டா மற்றும் இதர நலத்திட்ட கோரிக்கைகள் தொடர்பாக மனுக்களாக எழுதி ஜமாபந்தி நடக்கும் நாளன்று சம்பந்தப்பட்ட தாலுகா அலுவலகத்தில் வருவாய்த் தீர்வாய அலுவலரிடம் நேரில் சமர்ப்பிக்கலாம். பொதுமக்களின் மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களால் உரிய விசாரணை செய்யப்பட்டு, ஜமாபந்தி நாட்களில் தகுதியின் அடிப்படையில் உடனடியாக உத்தரவுகள் பிறப்பிக்கப்படும். எனவே பொதுமக்கள் தங்களுடைய கிராமத்தில் ஜமாபந்தி நடைபெறும் நாளில் தங்களது மனுக்களை சமர்ப்பித்து பயன்பெறலாம். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


Next Story