சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் மல்லிகை பூ கிலோ ரூ.1,435-க்கு ஏலம்


சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் மல்லிகை பூ கிலோ ரூ.1,435-க்கு ஏலம்
x

சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் மல்லிகை பூ கிலோ ரூ.1,435-க்கு ஏலம்

ஈரோடு

சத்தியமங்கலம்

சத்தியமங்கலம் கரட்டூர் ரோட்டில் பூ மார்க்கெட் உள்ளது. இங்கு தினமும் காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை பூக்கள் ஏலம் நடைபெறும். அதன்படி நேற்று நடந்த ஏலத்துக்கு சத்தியமங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து விவசாயிகள் 5 டன் பூக்களை எடுத்து வந்திருந்தார்கள்.

இதில் மல்லிகைப்பூ (கிலோ) ரூ.1,435-க்கும், முல்லை ரூ.800-க்கும், காக்கடா ரூ.750-க்கும், செண்டுமல்லி ரூ.46-க்கும், பட்டுப்பூ ரூ.72-க்கும், சாதிமல்லி ரூ.600-க்கும், கனகாம்பரம் ரூ.700-க்கும், அரளி ரூ.200-க்கும், துளசி ரூ.50-க்கும், செவ்வந்தி ரூ.80-க்கும், சம்பங்கி ரூ.140-க்கும் ஏலம் போனது.


Next Story