விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நெல்லையில் மல்லிகை பூ கிலோ ரூ.2 ஆயிரத்துக்கு விற்பனை


விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நெல்லையில்   மல்லிகை பூ கிலோ ரூ.2 ஆயிரத்துக்கு விற்பனை
x

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நெல்லையில் மல்லிகை பூ கிலோ ரூ.2 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்டது

திருநெல்வேலி

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நெல்லையில் மல்லிகை பூ கிலோ ரூ.2 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்டது.

விநாயகர் சதுர்த்தி

நெல்லை பூ மார்க்கெட்டில் கடந்த வாரம் பூக்கள் விலை குறைந்து காணப்பட்ட நிலையில் ஆவணி மாதம் முதல் முகூர்த்த நாளான நேற்று முன்தினம் பூக்களின் விலை அதிகரித்து மல்லிகை கிலோ ரூ.1,000-க்கு விற்கப்பட்டது.

இந்த நிலையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நேற்று பூக்களின் விலை மேலும் அதிகரித்தது. அதன்படி மல்லிகை பூ கிலோ ரூ.2 ஆயிரத்திற்கு விற்கப்பட்டது. பிச்சிப்பூ ரூ.1,500 முதல் ரூ.2 ஆயிரம் வரையும், முல்லை, கலர் பிச்சிப்பூ ரூ.1,000, கனகாம்பரம் ரூ.800, வாடாமல்லி ரூ.60-க்கும், கேந்திப்பூ ரூ.40-க்கும் விற்கப்பட்டது.

இதேபோல் ஒரு கட்டுகள் கொண்ட ரோஜா ரூ.200-க்கும், அரளிப்பூ ரூ.200-க்கும், துளசி ரூ.10-க்கும், அருகம்புல் ஒரு கட்டு ரூ.20-க்கும் விற்கப்பட்டது. பூக்கள் விலை அதிகமாக இருந்தாலும் பொதுமக்கள் போட்டிபோட்டு பூக்களை வாங்கிச் சென்றனர். இதனால் பூ மார்க்கெட்டில் விற்பனை மும்முரமாக காணப்பட்டது.

பூஜை பொருட்கள் விற்பனை

கொரோனா தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளுக்கு பின்னர் இந்த ஆண்டு விமரிசையாக விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாப்பட உள்ளது. இதையொட்டி பல்வேறு இடங்களில் சிறிய வகையிலான விநாயகர் சிலைகளும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

நெல்லை டவுன், தச்சநல்லூர், சமாதானபுரம், வண்ணார்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் விநாயகர் சதுர்த்தி வழிபாட்டு பொருட்களின் விற்பனை அமோகமாக இருந்தது. வீடுகளில் வைத்து வழிபடுவதற்காக சிறிய விநாயகர் சிலைகள், பழங்கள், பொரி, சுண்டல் மற்றும் பூஜை பொருட்களை பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி சென்றனர்.

பாளையங்கோட்டை, நெல்லை டவுன் மார்க்கெட்டுகளில் பூஜை பொருட்கள் குவித்து வைக்கப்பட்டு இருந்ததால், வழக்கத்தை விட பொதுமக்களின் கூட்டம் நேற்று அதிகமாக காணப்பட்டது. இதனால் ஒரு சில இடங்களில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.


Next Story