நீலகிரியில் ஜெயந்தி விழா: கிருஷ்ணர்- ராதை வேடமிட்டு குழந்தைகள் ஊர்வலம்-கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன


தினத்தந்தி 7 Sept 2023 6:00 AM IST (Updated: 7 Sept 2023 6:00 AM IST)
t-max-icont-min-icon

நீலகிரியில் கிருஷ்ண ஜெயந்தி விழா நடந்தது. கூடலூர் பகுதியில் கிருஷ்ணர்- ராதை வேடமிட்டு குழந்தைகளின் ஊர்வலமும் நடைபெற்றது.

நீலகிரி

கூடலூர்

நீலகிரியில் கிருஷ்ண ஜெயந்தி விழா நடந்தது. கூடலூர் பகுதியில் கிருஷ்ணர்- ராதை வேடமிட்டு குழந்தைகளின் ஊர்வலமும் நடைபெற்றது.

கிருஷ்ண ஜெயந்தி விழா

ஆவணி மாதம் அஷ்டமி நாளில் கிருஷ்ண பரமாத்மா அவதரித்ததாக புராண வரலாறுகள் கூறுகிறது. இதையொட்டி ஆண்டுதோறும் ஆவணி மாதம் வரும் அஷ்டமி நாளில் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்பட்டு வருகிறது. நேற்று கிருஷ்ண ஜெயந்தி மற்றும் கோகுலாஷ்டமியையொட்டி நீலகிரியில் பல்வேறு இடங்களில் ஊர்வலம் நடைபெற்றது.

இதில் கிருஷ்ணர்- ராதை வேடமிட்டு ஏராளமான குழந்தைகள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர். கூடலூர் தொரப்பள்ளியில் உள்ள ராமர் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா நடைபெற்றது. தொடர்ந்து கிருஷ்ணர் -ராதை வேடமிட்டு ஏராளமான குழந்தைகள் தொரப்பள்ளி, குனில் வயல் உள்பட பல்வேறு முக்கிய சாலைகள் வழியாக ஊர்வலமாக சென்றனர். இதேபோல் பாடந்தொரையில் கிருஷ்ண ஜெயந்தி விழா நடைபெற்றது.

குழந்தைகள் ஊர்வலம்

இதைத் தொடர்ந்து முக்கிய சாலை வழியாக ஏராளமான குழந்தைகள் கிருஷ்ணர்- ராதை வேடமிட்டு ஊர்வலமாக சென்று முத்துமாரியம்மன் கோயிலை அடைந்தனர். இதனிடையே கூடலூர் புத்தூர்வயல், பொன்னானி மகாவிஷ்ணு கோவில்கள், கோழிப்பாலம் அய்யப்பன் கோவில் உள்பட பல்வேறு கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.


Next Story