ஜெபமாலை மாதா ஆலய தேர்த்திருவிழா
ஜெபமாலை மாதா ஆலய தேர்த்திருவிழா
கருமத்தம்பட்டி
கருமத்தம்பட்டியில் பழமை வாய்ந்த புனித ஜெபமாலை மாதா பேராலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் 382-ம் ஆண்டு தேர்த்திருவிழா, கடந்த மாதம் 23-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத்தொடர்ந்து தினமும் காலை, மாலை நேரங்களில் திருப்பலியும், சிறிய தேர் பவனியும் நடைபெற்று வருகிறது.
விழாவின் சிகர நிகழ்ச்சியான ஆடம்பர தேர் பவனி, நாளை(ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. கடந்த 2 ஆண்டுகளாக தேர்த்திருவிழா கொரோனா காரணமாக ஆலய வளாகத்தில் எளிமையாக நடந்தது. ஆனால் இந்த ஆண்டு விமரிசையாக நடைபெற உள்ளதால், கோவை மாவட்ட கிறிஸ்தவர்கள் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்தும் கிறிஸ்தவர்கள் வந்து கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி ஆலயம் மற்றும் கெபி வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலிக்கிறது. இது தவிர 100-க்கும் மேற்பட்ட கடைகளும் அமைக்கப்பட்டு உள்ளன.