பெருமாள் கோவிலில் ஜேஷ்டாபிஷேகம்


பெருமாள் கோவிலில் ஜேஷ்டாபிஷேகம்
x

பெருமாள் கோவிலில் ஜேஷ்டாபிஷேகம் நடந்தது.

திருச்சி

சமயபுரம்:

மண்ணச்சநல்லூர் அருகே திருவெள்ளறையில் பிரசித்தி பெற்ற புண்டரீகாட்ச பெருமாள் கோவில் உள்ளது. ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலின் உப கோவிலாக விளங்கும் இந்த கோவிலில் நேற்று ஜேஷ்டாபிஷேக விழா நடைபெற்றது. இதைெயாட்டி நேற்று காலை ஸ்ரீரங்கம் காவிரி ஆற்றில் இருந்து ஒரு தங்க குடம் மற்றும் 21 வெள்ளி குடங்களில் புனித நீரை யானை மீது வைத்தும், கோவில் பட்டர்கள் சுமந்தும் மண்ணச்சநல்லூர் வழியாக திருவெள்ளறைக்கு எடுத்து வரப்பட்டது. அந்த தீர்த்த குடங்கள் ஸ்வஸ்திக் குளம் அருகே வைக்கப்பட்டு அங்கிருந்து மேளதாளங்கள் முழங்க முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து கோவிலின் மூலஸ்தானத்தை சென்றடைந்தது. இதைத்தொடர்ந்து புனித நீரால் பெருமாள் மற்றும் தாயாருக்கு சிறப்பு அபிஷேகமும், மாலையில் தீபாராதனையும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


Next Story