கோவில் விழாவில் பெண்ணிடம் நகை பறிப்பு


கோவில் விழாவில் பெண்ணிடம் நகை பறிப்பு
x
தினத்தந்தி 5 Sept 2023 1:15 AM IST (Updated: 5 Sept 2023 1:15 AM IST)
t-max-icont-min-icon

கோவில் விழாவில் பெண்ணிடம் நகை பறித்தவர் பிடிபட்டார்.

சிவகங்கை

காரைக்குடி

காரைக்குடி சூடாமணிபுரத்தைச் சேர்ந்தவர் ரோகினி (வயது 70). இவர் நேற்று நடைபெற்ற கொப்புடையநாயகி அம்மன் கோவில் கும்பாபிஷேத்தை காண சென்றார். கூட்ட நெரிசலில் அவரது கழுத்தில் கிடந்த 9 பவுன் தங்க சங்கிலியினை மற்றொரு பெண் அறுத்ததை கண்காணிப்பு கேமரா பதிவுகளை கட்டுப்பாட்டு அறையில் பார்வையிட்டுக்கொண்டிருந்த போலீசார் கவனித்தனர். இது குறித்து அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாருக்கு உரிய அடையாளங்களோடு தெரிவித்தனர். அதன் பேரில் குற்றப்பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உதயகுமார் தலைமையிலான போலீஸ் படையினர் அப்பகுதியினை சுற்றி வளைத்து ரோகினி கழுத்தில் கிடந்த தங்க சங்கிலியினை திருடிய கோவில்பட்டியை சேர்ந்த வெள்ளையம்மாள் (35) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து தங்க சங்கிலியை மீட்டனர்.


Next Story