மூதாட்டியிடம் நகை பறிப்பு
மூதாட்டியிடம் நகையை பறித்து சென்றனர்.
விருதுநகர் அருகே ஆர்.ஆர். நகர் விநாயகர் கோவில் தெருவில் வசிப்பவர் ராஜகோபாலம்மாள் (வயது 74). இவர் கோவில்பட்டிக்கு பஸ்சில் சென்று விட்டு வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் 30 வயது மதிக்கத்தக்க 2 நபர்கள் நடந்து வந்து கொண்டிருந்தனர். அதில் ஒருவன் திடீரென ராஜகோபாலம்மாள் கழுத்தில் கிடந்த 3 பவுன் தங்க சங்கிலியை பறிக்க முயன்றான். ராஜகோபாலம்மாள் சங்கிலியை அழுத்திப் பிடித்துக் கொண்ட நிலையில் அந்த நபர் சங்கிலியை வேகமாக பறித்ததில் ராஜகோபாலம்மாளுக்கு கழுத்தில் காயம் ஏற்பட்டது. அந்த 2 நபர்களும் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பி ஓடிவிட்டனர். இதனால் காயமடைந்த ராஜகோபாலம்மாள் அம்மாபட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை எடுத்துக்கொண்டார். இதுகுறித்து வச்சக்காரப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து மேற்படி 2 நபர்களையும் தேடி வருகின்றனர்.