பெண்ணிடம் நகை பறிப்பு


பெண்ணிடம் நகை பறிப்பு
x

பெண்ணிடம் இருந்து நகையை பறித்து சென்றனர்.

விருதுநகர்


விருதுநகர் அருகே உள்ள கடம்பன்குளம் பஞ்சாயத்தில் பசும்பொன்புரத்தில் வசித்து வருபவர் ராதாகிருஷ்ணன். இவரது மனைவி நாகலட்சுமி (வயது 54). இவர் அதிகாலையில் பாலவநத்தம்- இருக்கன்குடி ரோட்டில் சென்றார். அப்போது மோட்டார் சைக்கிளில் 2 மர்ம நபர்கள் முக முடி அணிந்து கொண்டு வந்தனர். அப்போது ஒருவன் நாகலட்சுமியின் முகத்தில் தண்ணீரை ஊற்றி அவர் கழுத்தில் கிடந்த 3½ பவுன் தங்க சங்கிலியை பறிக்க முயன்றான். நாகலட்சுமி சங்கிலியை பிடித்துக்கொண்டு அவனுடன் போராடியதாக கூறப்படுகிறது. இதையடுத்து பாதி செயினை கட் பண்ணி பறித்து கொண்டான். இதையடுத்து நாகலட்சுமியை பக்கத்தில் உள்ள பள்ளத்தில் தள்ளிவிட்டு அவர்கள் 2 பேரும் மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்று விட்டனர். இதில் படுகாயம் அடைந்த நாகலட்சுமி விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து சூலக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


Next Story