பரமத்தி அருகே வக்கீல் வீட்டில் 5 பவுன் நகை திருட்டு


பரமத்தி அருகே  வக்கீல் வீட்டில் 5 பவுன் நகை திருட்டு
x

பரமத்தி அருகே வக்கீல் வீட்டில் 5 பவுன் நகை திருட்டு

நாமக்கல்

பரமத்திவேலூர்:

பரமத்தி அருகே உள்ள பிள்ளைகளத்தூரை சேர்ந்தவர் ஜெயராஜ் (வயது 78) வக்கீல். இவர் கடந்த 9-ந் தேதி தனது தங்கையின் மகள் வீட்டு திருமணத்திற்கு குடும்பத்துடன் சென்று விட்டு மீண்டும் 10-ந் தேதி இரவு வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பின்னர் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் வைக்கப்பட்டிருந்த 5 பவுன் நகை திருட்டு போனது தெரியவந்தது. இதுகுறித்து ஜெயராஜ் பரமத்தி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வக்கீல் வீட்டில் நகைகளை திருடி சென்ற மர்தநபர்களை தேடி வருகின்றனர்.


Next Story